சிறீநாத் நாராயணன் (Srinath Narayanan) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். சென்னையைச் சேர்ந்த இவர் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். 2012[1]., 2013[2], 2014[3] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சிறுவர் சதுரங்க போட்டிகளில் சிறீநாத் வெற்றி பெற்றார் இந்திய சதுரங்க மேதையும் கிராண்டு மாசுட்டருமான நிகால் சேரினுக்கு பயிற்சியாளராகப் பணிபுரிகிறார்[4].
2002 ஆம் ஆண்டில் சிறீநாத் மிகச்சிறு வயது பிடே தரப்புள்ளிகள் பெற்ற சதுரங்க வீர்ர் என்ற பெருமையைப் பெற்றார்[5]. 2005 ஆம் ஆண்டு சுலையில் பிரான்சு நாட்டின் பெல்போர்ட்டில் நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் வெற்றி பெற்று 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் சனான் சுச்கிரோவ், சாம்வேல் டெர்சகாக்யான், வெசுலி சோ ஆகியோரை சம்நிலை முறிவு போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தோற்கடித்தார். இவர்கள் அனைவரும் இறுதி சுற்றில் 8.5 புள்ளிகள் எடுத்திருந்தனர்[6]. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய சிறீநாத் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். 2017 செப்டம்பரில் இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது[7].அவருக்கு செப்டம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.[8].