சிறீரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க2 ம1 த2 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2த2 ம1 க2 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது.
| |||||||