சிறீராஜ் மருத்துவமனை

சிறீராஜ் மருத்துவமனை
அமைவிடம் பேங்காக், தாய்லாந்து
மருத்துவப்பணி தேசிய சுகாதார காப்பீட்டு முறை
வகை கற்பித்தல்
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவ பீடம் சிறீராஜ் மருத்துவமனை, மகிதோல் பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு உள்ளது
படுக்கைகள் 2,221
நிறுவல் 26 ஏப்ரல்l 1888
வலைத்தளம் [www2.si.mahidol.ac.th/en/ சிறீராஜ் மருத்துவமனை]
பட்டியல்கள்
A large complex of buildings, most over ten storeys high, on the bank of a river; one bears a sign with the words "SIRIRAJ HOSPITAL"; another says "FACULTY OF NURSING"
தாய்லாந்தின் மிகப் பழமையான மருத்துவமனையானது 1888 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது

சிரிராஜ் மருத்துவமனை (Siriraj Hospital ) என்பது தாய்லாந்தின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய மருத்துவமனையுமாகும். இது சாவோ பிரயா ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பேங்காக்கில், தம்மசாத் பல்கலைக்கழகத்தின் தா பிரச்சன் வளாகத்திற்கு எதிரே உள்ளது. இது மகிதோல் பல்கலைக்கழக மருத்துவ பீடம் சிரிராஜ் மருத்துவமனையின் முதன்மை போதனா மருத்துவமனையாகும்.

விளக்கம்

[தொகு]

2,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட திறனால் இம்மருத்துவமனைக்கு ஆண்டுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் வருகை தருகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரியதும், பரபரப்பான மருத்துவ மையங்களில் [1] [2] இதுவும் ஒன்றாகும். மருத்துவப் பள்ளி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250 மருத்துவ மாணவர்களையும், 100க்கும் மேற்பட்டவையும் முதுகலை உறைவிடப் பயிற்சிக்கும் ஏற்றுக்கொள்கிறது. இது தாய்லாந்தின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இதன் மூன்றாம் நிலை பராமரிப்புப் பிரிவு தாய்லாந்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கான பரிந்துரை மையமாகும்.

வரலாறு

[தொகு]
சாவோ பிரயா ஆற்றிலிருந்து சிறீராஜ் மருத்துவமனை

உலகளாவிய வாந்திபேதி பரவிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1888 ஆம் ஆண்டில் மன்னர் சுலலாங்கொர்ன் இந்த மருத்துவமனையை நிறுவினார். மருத்துவமனை திறப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக வயிற்றுப்போக்கு காரணமாக இறந்த மன்னரின் 18 மாத மகன் இளவரசர் சிறிராஜ் காகுதாபந்த் நினைவாக இம்மருத்துவமனைக்கு அவரது பெயரிடப்பட்டது. மருத்துவப் பள்ளி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1890 இல் நிறுவப்பட்டது.

இளவரசர் தீபாங்கோர்ன் ராஸ்மிஜோதியும் இங்கு பிறந்தார். [3]

மருத்துவமனை செப்டம்பர் 2009 முதல் ஆகத்து 2013 வரை தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சின் இல்லமாக இருந்தது. அவர் சுவாசக் கோளாறுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் நுழைந்தார். அக்டோபர் 2014 இல் மன்னர் பூமிபால் இங்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்தார். [4] அவர் 13 அக்டோபர் 2016 அன்று இறந்தார். [5]

சிறீராஜ் மருத்துவமனையில் மன்னர் சுலலாங்கொர்ன் மற்றும் இளவரசர் சிறீராஜ் காகுதாபந்த் ஆகியோரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்கள்

[தொகு]
சிறீராஜ் மருத்துவமனை, பாங்காக், தாய்லாந்தின் மிகப் பழமையானதும், மிகப்பெரியதுமான மருத்துவமனை.

இம்மருத்துவமனையில் ஏழு மருத்துவ அருங்காட்சியகங்கள் உள்ளன. அவை சிறீராஜ் பிமுக்ஸ்தான் அருங்காட்சியகம், எல்லிஸ் நோயியல் அருங்காட்சியகம், காங்க்டன்ஸ் உடற்கூறியல் அருங்காட்சியகம், சாங்க்கிரான் நியோம்சன் தடயவியல் மருத்துவ அருங்காட்சியகம், ஒட்டுண்ணி அருங்காட்சியகம், ராணி அன்னை சிறிகித் அருங்காட்சியகம் மற்றும் சூட் சாங்விச்சியன் வரலாற்றுக்கு முந்தைய அருங்காட்சியக ஆய்வகம் ஆகியன. [6]

நிரந்தர கண்காட்சிகளில் உடற்கூற்றியல், நோயியல், பிறவிக் கோளாறுகள், நச்சியியல், தாய் பாரம்பரிய மருத்துவத்தின் நுட்பங்கள் மற்றும் தடயவியல் நோயியல் பற்றிய பிரிவுகள் ஆகியவையும் அடங்கும் . 2008 ஆம் ஆண்டில், தற்காலிக கண்காட்சியில் 2004 சுனாமியின் போது இம்மருத்துவமனையின் பங்கு இடம்பெற்றது. சுனாமி யானது தாய்லாந்து, அந்தமான் கடற்கரை மேலும், பிற நாடுகளில் பேரழிவிற்கு உட்படுத்தியது. சமீபத்திய அருங்காட்சியகம் சிரிராஜ் பிமுக்ஸ்தான் அருங்காட்சியகம், இது 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்டது. சிரிராஜின் புதிதாக திறக்கப்பட்ட தனியார் துணை நிறுவனமான சிரிராஜ் பியாமஹராஜ்கருன் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, பழைய பாங்காக் நொய் ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட விண்டேஜ் கட்டிடக்கலையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் பாரம்பரிய மருத்துவத்திலிருந்து நவீன காலம் வரை தாய்லாந்தில் மருத்துவ வரலாற்றைக் காட்சிப்படுத்துகிறது. மேலும் அருங்காட்சியகமும், மருத்துவமனையும் அமைந்துள்ள பாங்காக் நொய் பகுதியின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Unleashing the Full Potential of Your Medical Travel Program". www.medicaltourismmag.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
  2. "Siriraj Hospital". TakeMeTour (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
  3. https://www.springnews.co.th/palace/249037
  4. https://www.bbc.com/news/world-asia-29502108
  5. https://www.bbc.com/news/world-asia-37643326
  6. Chaiyong, Suwitcha (17 June 2019). "Grisly guidance". Bangkok Post. https://www.bangkokpost.com/thailand/special-reports/1696544/grisly-guidance. பார்த்த நாள்: 18 June 2019. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Siriraj Hospital
என்பதில் ஊடகங்கள் உள்ளன.