சிறீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி

சிறீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி
பிறப்புசெம்போலு சீதாராம சாஸ்திரி
(1955-05-20)20 மே 1955
அனகாபள்ளி, ஆந்திர மாநிலம், இந்தியா
இறப்பு30 நவம்பர் 2021(2021-11-30) (அகவை 66)
சிக்கந்தராபாத், இந்தியா
பணிபாடலாசிரியர், கவிஞர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–2021

சிரிவெண்ணெலா சீதாராம சாஸ்திரி (Sirivennela Seetharama Sastry) (பிறப்பு செம்போலு சீதாராம சாஸ்திரி ; 20 மே 1955 - 30 நவம்பர் 2021) ஓர் இந்தியக் கவிஞரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். இவர் குறிப்பாக தெலுங்குத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு நாடகங்களில் இவரது படைப்புகளுக்காக அறியப்பட்டவர். 1986 ஆம் ஆண்டு வெளியான சிறிவெண்ணெலா என்றத் திரைப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதிய பிறகு இவர் தனது திரைப் பெயரைப் பெற்றார். சாஸ்திரி தனது பணிக்காக பதினொரு மாநில நந்தி விருதுகள் மற்றும் ஐந்து தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2020 வரை 3000 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார். 2019 ஆம் ஆண்டில், கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

பிற படைப்புகள்

[தொகு]

சீதாராம சாஸ்திரி "சுபக்ருஹா" என்ற விளம்பரப் படத்தில் பிரபல நடிகராக இருந்தார்.[2] இவரது பாடல் வரிகள் மற்றும் கவிதைகள் பற்றிய இவரது விளக்கம் சிறீவெண்ணிலா தரங்கு என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

இறப்பு

[தொகு]

சீதாராம சாஸ்திரி 30 நவம்பர் 2021 அன்று தெலுங்கானாவின் சிக்கந்திராபாத்திலுள்ள கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Here is the complete list of Padma awardees 2019- The New Indian Express". Archived from the original on 26 January 2019. பார்க்கப்பட்ட நாள் 27 January 2019.
  2. "Sirivennela Sitaramasastri Celeb Actor for Subhagruha projects India pvt ltd". YouTube. 31 August 2013. Archived from the original on 4 March 2015. பார்க்கப்பட்ட நாள் 23 February 2015.
  3. "Who was Sirivennela Seetharama Sastry; the Telugu Lyricist Died at 66 on Tuesday". International Business Times. 30 November 2021.
  4. "Lyricist Sirivennela Seetharama Sastry passes away due to lung cancer - Times of India" (in en). 30 November 2021 இம் மூலத்தில் இருந்து 30 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211130135641/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/lyricist-sirivennela-sastry-passes-away-due-to-lung-cancer/articleshow/88007245.cms. 

வெளி இணைப்புக்ள்

[தொகு]