சிறுசக்கர மல்லி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. adenophyllum
|
இருசொற் பெயரீடு | |
Jasminum adenophyllum Wall. ex. Charles Baron Clarke(C.B.Clarke)[1][2][3] | |
![]() | |
Jasminum adenophyllum range | |
வேறு பெயர்கள் [3] | |
Jasminum malayanum Kiew Jasminum trangense Kerr |
சிறுசக்கர மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum adenophyllum, ஆங்கிலம்:bluegrape jasmine, pinwheel jasmine, or princess jasmine) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[4], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[5] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் அடினோபில்லம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1882 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது. இவ்வினத்தாவரங்கள் விரைந்து வளரும் கொடியாகவும், நிலத்தில் படர்ந்து வளர்ந்து மண் அரிப்பைத் தடுக்கும். வளரும் இயல்புடையது.[6][7] இதன் தாயகமா, அந்தமான் தீவுகள், அசாம், மலேசியா, தாய்லாந்து போன்ற நிலப்பகுதிகள் என கணிக்கப்பட்டுள்ளது.[8] பூக்கள் வெண்மையாகக் காணப்படுகின்றன.
அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[9] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[10]
பிறப்பிடம்: அந்தமான் தீவுகள், அசாம், லாவோஸ், மலாயா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய இடங்களை, இத்தாவரயினத்தின் பிறப்பிடங்களாக பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[11]