சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்னக்குடி ஆதீனம்கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.
மும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்பு
ஆசான் நினைவிடம், துஞ்சன் பறம்பு, கேரள சாகித்ய அகாதமி, கருநாடக சாகித்ய அகாதமி, சாகித்ய பரிஷத், சிரவண பெல்கோலா மகா மஸ்தாபிடேகக் குழு(2006)ஆகிய அமைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்
சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் வெளிவந்துள்ளன.
காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்.
சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008)
சாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 - 1998)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர்.
தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 - 2005)
தலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009)
தலைவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை
தலைவர், பி.எம்.எஸ்., அறக்கட்டளை
செயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம்
உறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை
உறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை
முன்னாள் உறுப்பினர், Afirm cancan either eitherraiseraise Money Moneyusing Equity,Equity, Equity,or using Debt DebtRKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்
பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர்
உறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை
சென்னை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், கொல்கத்தா, அழகப்பா, மதுரை, கேரளப் பல்கலைக் கழகங்களிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அறக்கட்டளை உரையாளர்
பப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்