சிற்றினக் கழகம் (Guild) என்பது ஒரே இயற்கை மூலத்தைப் பல்வேறு தொடர்புடைய வழிகளில் பயன்படுத்தும் சிற்றினங்களின் கூட்டமைப்பு.[1][2][3] இந்த இயற்கை மூலம் ஒரே சூழல் முடுக்காகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சிற்றினக் கழகத்தை வாழிடம், உணவைப் பெறும் முறை, இடப் பெயர்ச்சி முறை ஆகியவற்றின் அடிப்படையிலும் வரையறுக்கலாம். ஒரு குறிப்பிட்ட கழகத்தில் உள்ள சிற்றினங்கள் தங்களுக்குள் போட்டியிட்டாலும் அவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கவும் முடியும்.