உருவாக்கம் | 1996 |
---|---|
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
நோக்கம் | வகைப்பாட்டியல் தரவுத்தளம் |
தலைமையகம் | |
வலைத்தளம் | www |
சிற்றினங்கள் 2000 (Species 2000) என்பது உலகெங்கிலும் உள்ள தரவுத்தள நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட வகைப்பாட்டியல் தகவல் அமைப்புடன் இணைந்து, உலகின் உயிரினங்களின் விரிவான சரிபார்ப்புப் பட்டியலான வாழ்க்கை அட்டவணையைத் தொகுக்கிறது. சிற்றினங்கள் 2000 பிராங்க் பிசுபி மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களால் 1997-ல் தொடங்கப்பட்டது.[1][2][3] வாழ்க்கை அட்டவணை முதன்முதலில் 2001-ல் வெளியிடப்பட்டது. சிற்றினங்கள் 2000-ன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அமைப்புக்கள் உலகம் முழுவதும் அமைந்திருந்தாலும், இதன் செயலகம் நெதர்லாந்தின் லைடனில் உள்ள இயற்கை பல்லுயிர் மையத்தில் அமைந்துள்ளது.