சிலாங்கூர் சுல்தான் Sultan of Selangor Sultan Selangor Darul Ehsan سلطان سلاڠور | |
---|---|
![]() | |
வாரிசு தெங்கு அமீர் சா | |
ஆட்சிக்காலம் | சிலாங்கூர் சுல்தான் பதவியில்: (22 நவம்பர் 2001 - இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 8 மார்ச் 2003 |
முன்னையவர் | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் |
பிறப்பு | 24 திசம்பர் 1945 |
மரபு | லூவூ இராச்சியம்; தென் சுலாவெசி |
தந்தை | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் |
தாய் | ராஜா சைடத்துல் இசான் தெங்கு படார் |
சிலாங்கூர் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Selangor; மலாய்: Sultan Selangor Darul Ehsan; சீனம்: 雪兰莪苏丹达鲁依山; என்பவர் சிலாங்கூர் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், சிலாங்கூர் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், சிலாங்கூர் சுல்தான் என்பவர் சிலாங்கூர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார்.
தற்போதைய சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் 2001-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார்.
சிலாங்கூர் சுல்தான்கள் பூகிஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் சுலாவெசி தீவின் தெற்குப் பகுதியில் இருந்த லூவூ இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள். 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜொகூர்-ரியாவு சுல்தானகத்தின் (Johor Riau Sultanate) மீதான தகராற்றில் பூகிஸ் வம்சாவளியைச் சேர்ந்த பிரபுக்கள் ஈடுபட்டனர்.
மலாக்கா சுல்தானகத்தைச் சேர்ந்த ராஜா கெச்சிலுக்கு (Raja Kechil) எதிராக ஜொகூர் பெண்டகாரா வம்சத்தைச் சேர்ந்த சுலைமான் பத்ருல் ஆலாம் சா (Sulaiman Badrul Alam Shah) என்பவருக்கு ஆதரவாக பூகிஸ் வம்சாவளியைச் சேர்ந்த பிரபுக்கள் முழு ஆதரவை வழங்கினர்.[1]
இந்தக் காரணத்திற்காக, ஜொகூர்-ரியாவின் பெண்டகாரா ஆட்சியாளர்கள் பூகிஸ் பிரபுக்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டனர். பூகிஸ் பிரபுக்களுக்கு சிலாங்கூர் உட்பட பேரரசின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளை வழங்கினர். அத்துடன் பட்டங்களையும் வழங்கினர்.
ஐந்து பூகிஸ் வீரர்களில் ஒருவரான டாயிங் செலாக் (Daeng Chelak) என்பவர், சுலைமான் பத்ருல் ஆலாம் சாவின் சகோதரி தெங்கு மண்டக் (Tengku Mandak) என்பவரை மணந்தார்.[2] பின்னர் அவர் 1728 முதல் 1745 வரை ரியாவு சுல்தானகத்தின் இரண்டாவது யாங் டி-பெர்டுவான் மூடா எனும் இளவரசராக நியமிக்கப்பட்டார்.[3][4] அவர் 1743-இல் தன் மகனான ராஜா லுமுவை சிலாங்கூர் மாநிலத்தின் யாம் துவான் பதவியில் அமர்த்தினார்.[1]
அதே 1743-ஆம் ஆண்டில், பேராக்கின் 14-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது சா இப்னி சுல்தான் மன்சூர் சா III (Sultan Muhammad Shah ibni Sultan Mansur Shah III) என்பவர்; பேராக் சுல்தானகத்தின் அரியணையில் அமர்வதற்கு ராஜா லுமு (Raja Lumu) உதவிகள் செய்தார். அதன் காரணமாக ராஜா லுமு, ராஜா சிலாங்கூர் என பேராக் சுல்தானால் அங்கீகரிக்கப்பட்டார். ராஜா லுமு 1766-ஆம் ஆண்டு வரை ராஜா சிலாங்கூர் பட்டத்தைத் தொடர்ந்து 23 ஆண்டுகள் தக்க வைத்திருந்தார்.[1] இருப்பினும் அந்தக் காலக்கட்டம் வரையில் சிலாங்கூர் பிராந்தியம், ஜொகூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1745-இல் ராஜா லுமுவின் தந்தை இறந்த பிறகு, ராஜா லுமு, ரியாவு சுல்தானகத்தின் சுல்தான் பதவிக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக, ராஜா லுமுவின் உறவினரான டாயிங் கெம்போஜா (Daeng Kemboja) என்பவர் ரியாவு சுல்தானகத்தின் மூன்றாவது யாங் டி-பெர்துவான் மூடாவாக (Yang di-Pertuan Muda of Riau) நியமிக்கப்பட்டார்.[1][5]
பிப்ரவரி 1756-இல், ஜொகூரின் சுலைமான் பத்ருல் ஆலாம் சாவின் மருமகனான ராஜா மகமூட்டிற்கு எதிராக ஓர் உள்நாட்டுப் போர் மூண்டது. அந்தப் போரில் ராஜா மகமூட் வெற்றி பெற டச்சுக்காரர்கள் உதவிகள் செய்தார்கள். அதற்கு நன்றிக் கடனாக சிலாங்கூரில் ஈயம் தோண்டுவதற்கு டச்சுக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுலைமான் பத்ருல் ஆலாம் சாவின் அந்தச் செயலை ரியாவு சுல்தானகத்தின் டாயிங் கெம்போஜா, கிள்ளான் ராஜா துவா; மற்றும் ராஜா லுமு ஆகியோர் எதிர்த்தனர்.[2]
அதன் பின்னர் ராஜா லுமு தன் செல்வாக்கை வலுப்படுத்த முயன்றார். சிலாங்கூரை ஜொகூர் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு முயற்சிகள் செய்தார். அப்போது பேராக்கின் 16-ஆவது சுல்தானாக இருந்த சுல்தான் மகமூத் சா இப்னி சுல்தான் முகம்மது சா என்பவரிடம் இருந்து அங்கீகாரம் பெற முயன்றார்.[2] அதில் வெற்றியும் பெற்றார். அந்த வகையில் அவர் நவம்பர் 1766-இல், சிலாங்கூரின் முதல் சுல்தானாக ராஜா லுமு பதவியில் அமர்த்தப்பட்டார்; சுல்தான் சலாவுதீன் சா (Sultan Salehuddin Shah) என்ற ஆட்சிப் பெயரையும் பெற்றார்.[6][7][8][9]
1778-இல் சுல்தான் சலாவுதீன் சாவின் மரணத்திற்குப் பிறகு, அவரின் மகன் ராஜா இப்ராகிம் மர்கும் சாலே என்பவர் சிலாங்கூர் சுல்தான் பதவியை ஏற்றுக் கொண்டார். அத்துடன் சுல்தான் இப்ராகிம் சா (Sultan Ibrahim Shah of Selangor) என்ற பட்டத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்.[10] 1784-இல், கோலா சிலாங்கூர் மீது டச்சுக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் சுல்தான் இப்ராகிம் சா தோற்கடிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் கோத்தா மெலாவத்தியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சிலாங்கூர் ஆறு, மலாக்கா நீரிணையில் கலக்கும் முகத்துவாரத்தில், கோலா சிலாங்கூர் நகரின் மேற்குப் பகுதியில், ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் சிலாங்கூர் குன்று. அங்கு ஒரு பெரிய கோட்டை இன்றும் உள்ளது. அதை புக்கிட் மெலாவத்தி அல்லது கோத்தா மெலாவத்தி (Kota Malawati) என்று அழைக்கிறார்கள்.[11] 16-ஆம் நூற்றாண்டில் மெலாவத்தி கோட்டை கட்டப்பட்டது. மலாக்கா வின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் மகமுட் சா என்பவரின் (Sultan Mahmud) மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.[12]
பகாங் சுல்தானகத்தின் உதவியுடன் ஓர் ஆண்டிற்குள் கோத்தா மெலாவத்தியை, சுல்தான் இப்ராகிம் சா மீண்டும் கைப்பற்றினார்.[13] சுல்தான் இப்ராகிம் சா, பின்னர் பேராக் சுல்தானகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் கடன் சர்ச்சையில் அந்தக் கூட்டணியும் முறிந்தது.[10]
அக்டோபர் 18, 1826-இல் சுல்தான் இப்ராகிம் சா, இறந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் அவரின் மகன் ராஜா முகமது சுல்தான் முகமட் சா என்ற பட்டத்தைப் பெற்றார்.[14] அவரின் ஆட்சியின் போது அவரால் தன் தலைவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் சிலாங்கூர் ஐந்து தனிப்பட்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன் விளைவாக பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், லங்காட் மற்றும் லுக்குட் எனும் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.[15] சிலாங்கூர் சுல்தான் முகமட் சாவின் ஆட்சியில் அம்பாங் மாவட்டத்தில் ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்டன. இவை மக்களுக்கும் மாநிலத்திற்கும் வணிகத்தை கொண்டு வந்தன.[10]
31 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, சுல்தான் முகமட் சா, 1857-ஆம் ஆண்டு, வாரிசு எவரையும் நியமிக்காமல் காலமானார். இதன் விளைவாக, அவருக்குப் பின் அடுத்த சிலாங்கூர் சுல்தான் யார் என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில் அவரின் மருமகன், ராஜா அப்துல் சமாட் ராஜா அப்துல்லா அடுத்த சுல்தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட் என்ற பட்டத்தை பெற்றார்.[16] அவர் கிள்ளான் பிரதேசத்தின் அதிகாரத்தை 1866-இல் ராஜா அப்துல்லாவுக்கும்; லங்காட் பிரதேசத்தின் அதிகாரத்தை 1868-இல் கெடாவின் துங்கு குடினுக்கும் வழங்கினார். அவர்கள் இருவரும் சுல்தான் அப்துல் சமாட்டின் மருமகன்கள் ஆவார்கள்.[10]
சிலாங்கூர் சுல்தான்களின் பட்டியல்:[17]
தோற்றம் | பதவி வகித்த காலம் | சிலாங்கூர் சுல்தான் |
---|---|---|
![]() |
1745–1778 | சிலாங்கூர் சுல்தான் சாலேவுதீன் (Salehuddin of Selangor) (Raja Lumu) |
![]() |
1778–1826 | சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா (Ibrahim Shah of Selangor) (Raja Ibrahim) |
![]() |
1826–1857 | சிலாங்கூர் சுல்தான் முகமட் சா (Muhammad Shah of Selangor) (Raja Muhammad) |
![]() |
1857–1896 | சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட் (Sir Abdul Samad of Selangor) (Raja Abdul Samad) |
![]() |
1896–1938 | சிலாங்கூர் சுல்தான் சுலைமான் (Sir Sulaiman of Selangor) (Raja Sulaiman) |
![]() |
1938–1942 | சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன் (Sir Hisamuddin of Selangor) (Tengku Alam Shah) |
![]() |
1942–1945 (சப்பானிய ஆக்கிரமிப்பு) |
மூசா கயித்துதீன் ரியாட் சா (Musa Ghiatuddin Riayat Shah of Selangor) (Tengku Musaeddin) |
![]() |
1945–1960 (மறுசீரமைப்பு) |
சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன் (Sir Hisamuddin of Selangor) (Tengku Alam Shah) |
![]() |
1960–2001 | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் (Salahuddin of Selangor) (Tengku Abdul Aziz Shah) |
![]() |
2001 – தற்போது வரையில் |
சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் (Sharafuddin of Selangor) (Tengku Idris Shah) |
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)