சிலாங்கூர் மாநில சட்டமன்றம் Selangor State Legislative Assembly Dewan Negeri Selangor | |
---|---|
14-ஆவது சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 8 சூலை 1959 |
தலைமை | |
சுல்தான் சராபுதீன் இட்ரிஸ் ஷா 22 நவம்பர் 2001 முதல் | |
துணைப் பேரவைத் தலைவர் | |
அமிருடின் சாரி 10 டிசம்பர் 2020 முதல் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
செயலாளர் | காயத்திரி பிரசன்னா ஜெயகுமார் 27 சூன் 2018 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 56 குறைவெண் வரம்பு: 19 எளிய பெரும்பான்மை: 29 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 37 |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 2022 அரசாங்கம் (40) BN (5)
GTA (3)
WARISAN (1)
எதிர்க்கட்சிகள் (7) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 9 மே 2018 |
அடுத்த தேர்தல் | 26 ஆகஸ்டு 2023 |
கூடும் இடம் | |
சுல்தான் சலாவுதீன் கட்டிடம் Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah சா ஆலாம், சிலாங்கூர் | |
வலைத்தளம் | |
dewan |
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் அல்லது சிலாங்கூர் சட்டப் பேரவை (மலாய்: Dewan Negeri Selangor; ஆங்கிலம்: Selangor State Legislative Assembly; சீனம்: 雪兰莪州议会) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான சிலாங்கூர் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும்.[2]
சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமான சா ஆலாம் நகரில் அமைந்து இருக்கும் சுல்தான் சலாவுதீன் கட்டிடத்தில் (Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah); சிலாங்கூர் மாநிலப் பேரவை கூடுகிறது.[3]
இந்தப் பேரவை மாநிலத்தின் 56 தொகுதி இடங்களைக் கொண்டது. தீபகற்ப மலேசியா மாநிலங்களின் 11 சட்டமன்றங்களில் இதுவும். 2008-ஆம் ஆண்டு முதல், சட்டமன்ற நடவடிக்கைகள் இணையத்தின் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.[4]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் சிலாங்கூர் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.[5]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. சிலாங்கூர் மாநில சட்டமன்றம் சிலாங்கூர் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் நிங் சுயீ லிம் (Ng Suee Lim).
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் (முதலமைச்சர்) தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.
15-ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தை மலாக்கா சுல்தானகம் ஆட்சி செய்து வந்தது.
1511-இல் போர்த்துகீசியர்களிடம் மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர், மலாக்காவையும் அதைச் சார்ந்த நிலப் பகுதிகளையும் ஆட்சி செய்வதற்கு ஜொகூர் அரசு, அச்சே அரசு, சயாமிய அரசு, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், போன்றவர்கள் போட்டி போட்டனர்.
ஒரு காலக் கட்டத்தில் சிலாங்கூரின் பல பகுதிகளில் ஈயம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதுவும் சிலாங்கூரைக் கைப்பற்றுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. 1641-இல் போர்த்துகீசியர்களிடமிருந்து மலாக்காவை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். அவர்கள் சுலாவாசித் தீவிலிருந்து பூகிஸ் மக்களைச் சிலாங்கூருக்கு கொண்டு வந்தனர்.[6]
பூகிஸ்காரர்கள் தான் இப்போதைய சிலாங்கூர் சுல்தானகத்தை அமைத்தவர்கள் ஆகும். அப்போது சிலாங்கூரின் முதல் தலைநகரமாகக் கோலா சிலாங்கூர் இருந்தது. 1766-இல் கோலா சிலாங்கூர் அமைக்கப்பட்டது.
அதற்கு முன்னர் சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் மினாங்கபாவ் இனத்தவர் இருந்தனர். பூகிஸ்காரர்களின் வருகையால் மினாங்கபாவ் இனத்தவர் நெகிரி செம்பிலான் மாநிலப் பகுதிகளுக்குப் புறம் தள்ளப்பட்டனர். மினாங்கபாவ் இனத்தவர், இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் இருந்து குடியேறியவர்கள். இவர்கள் சிலாங்கூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்து வந்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. ரப்பர் உற்பத்தியில் உயர்வு, பெருமளவில் ஈயக் கனிவள இருப்பு போன்றவை சிலாங்கூர் மாநிலத்தின் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின.
ஈய இருப்புகள் சீனர்களை அதிகமாகக் கவர்ந்தன. ஆயிரக் கணக்கான சீனர்கள் சீனாவில் இருந்து குடியேறினர். இவர்கள் சிலாங்கூரில் தங்களுக்குள் இரகசியக் கும்பல்களை உருவாக்கிக் கொண்டனர். சிலாங்கூரின் நிலப் பகுதிகளின் பிரபுகளாக இருந்தவர்களுடன் இணைந்து கொண்ட இரகசியக் கும்பல்கள் ஈயச் சுரங்கங்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த இரகசிய கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபட்டு சிலாங்கூரில் சமூக, பொருளாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தின. இதுவே பிரித்தானியர்களின் அடக்கி ஆளும் தன்மைக்கு வழிகோலியது. பிரித்தானியர்கள் அந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதன் விளைவாக 1874-இல் சிலாங்கூர் சுல்தான் ஒரு பிரித்தானிய ஆளுநரை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.
பிரித்தானியர்கள் உருவாக்கிய ஒரு நிலைத் தன்மையினால் சிலாங்கூர் மீண்டும் வளம் பெற்றது. 1896-இல் பிராங்க் சுவெட்டன்காம் என்பவர் சிலாங்கூரின் பிரித்தானிய ஆளுநராக இருந்தார். அவர் சிலாங்கூரை மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் அமைப்பில் இணைத்தார். அந்த அமைப்பில் ஏற்கனவே நெகிரி செம்பிலான், பேராக், பகாங் மாநிலங்கள் உறுப்பியம் பெற்று இருந்தன. அந்த அமைப்பின் தலைநகரம் கோலாலம்பூரில் இருந்தது.
அரசு + நம்பிக்கை ஆதரவு | எதிரணி | |||||||
பாக்காத்தான் | பெஜுவாங் | வாரிசான் | பாரிசான் | பெரிக்காத்தான் | பங்சா | |||
40 | 3 | 1 | 5 | 5 | 2 | |||
19 | 15 | 6 | 5 | 4 | 1 | |||
பிகேஆர் | ஜசெக | அமாணா | பெஜுவாங் | வாரிசான் | அம்னோ | பெர்சத்து | பெர்சத்து | பங்சா |