சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், இயக்குநர் செல்லா இயக்கி 2018ல் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடி நகைச்சுவை படம்.[1] விஷ்ணு விஷால் ஹீரோவக நடித்து தயாரித்த இப்படத்தில் ஓவியாவுடன் இவர் நடித்துள்ளார்.[2] இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படம் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. இது 21 டிசம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது. வெளியானதும் இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ஆர்யன் ஆகியோர் இணைந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் டர்மரிக் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் தயாரித்தனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. இப்படத்தின் படத் தொகுப்பாளர் லிவிங்ஸ்டன் ஆண்டனி ரூபன் ஆவார். இப்படத்தின் ஒளிப்பதிவு ஜே. லக்ஷ்மன் செய்துள்ளார்.
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டன. இது 21 டிசம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது.
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா இப்படத்திற்கு 3/5 மதிப்பென் வழங்கியது.[4] சைஃபி மூவிஸ் 3.5/5 மதிப்பென் வழங்கியது.சைஃபி தனது விமர்சனத்தில் "நீங்கள் ஒரு நல்ல சிரிப்பைத் தேடுகிறீர்களானால், சிலுக்குவார்பட்டி சிங்கம் உங்களை திருப்திப்படுத்துவது உறுதி" என்றது. பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனம் 2.5/5 மதிப்பென் வழங்கியது.[5] ஐ. எம். டி. பி 5.3/10 மதிப்பென் வழங்கியது.[1] இந்தியா கிலிட்ஸ் நிறுவனம் 2.5/5 மதிப்பென் வழங்கியது.[6]
இப்படத்திற்கு இசை அமைத்தவர் லியோன் ஜேம்ஸ்.
டியோ டியோ ரியா - சுனிதி சவுகான், நரேஷ் ஐயர், சந்தோஷ் ஹரிஹரன் - 4:44
மயக்காத - சுதர்ஷன் அசோக் - 4:25
ஏய் டம்மி - பட்டாசு பாம்பா பாக்கியா - 4:32
சிலுக்குவார்பட்டி சிங்கம் - சர்கம் கொயர், வைக்கோம் விஜயலட்சுமி - 3:34