சிவ பிரதாப் சுக்லா Shiv Pratap Shukla | |
---|---|
![]() சுக்லா 2018-ல் | |
22வது இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 பிப்ரவரி 2023 | |
முன்னையவர் | இராசேந்திர அர்லேகர் |
நிதி அமைச்சகம் (இந்தியா) | |
பதவியில் 3 செப்டம்பர் 2017 – 30 மே 2019 | |
முன்னையவர் | சந்தோஷ் குமார் கங்க்வார் |
பின்னவர் | அனுராக் தாகூர் |
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை-உத்தரப் பிரதேசம்[1] | |
பதவியில் 5 சூலை 2016 – 5 சூலை 2022 | |
முன்னையவர் | முக்தர் அப்பாஸ் நக்வி, பாரதிய ஜனதா கட்சி |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
துணைத்தலைவர், பாரதிய ஜனதா கட்சி (உ.பி.) | |
பதவியில் 2012–2017 | |
சிறைத்துறை அமைச்சர் | |
பதவியில் 1996–1998 | |
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 1998–2002 | |
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1989–2002 | |
முன்னையவர் | சுனில் சாத்திரி |
பின்னவர் | இராதா மோகன் தாசு அகர்வால் |
தொகுதி | கோரக்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1952 உருத்ராபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | ஆளுநர் மாளிகை, சிம்லா |
முன்னாள் மாணவர் | தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் |
பணி | Lawyer |
சிவ பிரதாப் சுக்லா (Shiv Pratap Shukla)(பிறப்பு 1 ஏப்ரல் 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இமாச்சல பிரதேச ஆளுநரும் ஆவார். இவர் மோதி தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். இவர் இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் (மாநிலங்களவை) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சுக்லா 1989-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் சுனில் சாத்திரியைத் தோற்கடித்தார்.[2] இவர் 1989, 1991, 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அரசாங்கங்களில் சுக்லா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 1996-1998 காலத்தில் சிறைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4][5][6] பாரதிய ஜனதா கட்சி - பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி மற்றும் கல்யாண் சிங் ஆகியோரின் குறுகிய கால கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 1996-1998-ல் நியமிக்கப்பட்டார் பின்னர் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராக 1998-2002ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங்கின் பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.[4]
சுக்லா 13 பிப்ரவரி 2023 முதல் இமாச்சலப்பிரதேச ஆளுநராகப் பதவி வகித்து வருகின்றார்.