சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]
சிவசங்கரி எழுத்தாளர் ஆவதற்கு முன்னர் நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.[1] அவர் கணவர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர். சிவசங்கரி மாமனார் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் தொடங்கிய தொழிற்சாலை கவனித்துகொள்வதற்காக சிவசங்கரியும் அவர் கணவரும் தமது வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்தனர். நடிகையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா இவருக்குத் தோழியாவார்.[1]
இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 மே 12 ஆம் நாளிட்ட கல்கி இதழில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.[1] இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.
- அது சரி, அப்புறம்? - 1985
- அம்மா பிள்ளை - - 1986
- அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979
- அவன் - 1985
- ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
- ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
- ஆயுள் தண்டனை - 1979 (கண்ணீர்ப்பூக்கள் என்னும் திரைப்படமாக வந்தது)[1]
- இரண்டு பேர் - 1979
- இனி - 1993
- இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
- எதற்காக? - 1970
- ஏன்? - 1973
- ஒரு சிங்கம் முயலாகிறது (அவன், அவள், அது என்னும் திரைப்படமாக வந்தது)[1]
- ஒரு மனிதனின் கதை - 1980 (திரைப்படமாக வந்தது)[1]
- ஒற்றைப் பறவை - 1985
- கண்கெட்ட பிறகு
- கருணைக் கொலை - 1984
- சுட்டமண் - 1991
- சியாமா - 1973
- தவம் - 1982
- திரிசங்கு சொர்க்கம் - 1982
- திரிவேணி சங்கமம் - 1971 (கன்னடத்தில் ‘மறையாத தீபாவளி’ என்னும் திரைப்படமாக வந்தது.)[1]
- நண்டு - 1975 (திரைப்படமாக வந்தது)
- நதியின் வேகத்தோடு - 1975
- நான் நானாக - 1990
- நூலேணி - 1985
- நெருஞ்சி முள் - 1981
- பறவை - 1982
- பாலங்கள் - 1983
- பிராயச்சித்தம் - 1981
- போகப்போக - 1981
- மலையின் அடுத்த பக்கம் - 1987
- மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
- மெள்ள மெள்ள - 1978
- வளர்த்த கடா - 1979
- வானத்து நிலா - 1989
- வெட்கம் கெட்டவர்கள் (பெருமை என்னும் திரைப்படமாக வந்தது)[1]
- வேரில்லாத மரங்கள் - 1987
- 47 நாட்கள் - 1978 (திரைப்படமாக வந்தது)[1]
இவரது குறும்புதினங்கள் எட்டுத்தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
- அடிமாடுகள்
- ஏரிக்கடியில் சில கனவுகள்
- ஒரு சிங்கம் முயலாகிறது
- ஒரு பகல் - ஒரு இரவு
- தகப்பன்சாமி
- துள்ளமுடியாத புள்ளிமான்
- இந்திராவின் கதை - 1972
- அப்பா - 1989
- அனுபவங்கள்
- அனுபவங்கள் தொடர்கின்றன
- பாரத தரிசனம் (இந்திய பயணக்கதை)
- புதுப்புது அனுபவங்கள் - 4 தொகுதிகள்
- எண்ணங்கள் வசப்பட...!
- சின்ன நூற்கண்ட நம்மைச் சிறைப்படுத்துவது?
- சூரியவம்சம்:நினைவலைகள்
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
[தொகு]
- அம்மா சொன்ன கதைகள் ( புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது ) - 1996
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009