சிவப்பு மல்லி | |
---|---|
![]() | |
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | எம். பாலசுப்பிரம்ணியன் பால சுப்பிரமணியன் கம்பனி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் அருணா |
வெளியீடு | ஆகத்து 15, 1981 |
நீளம் | 3603 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவப்பு மல்லி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1981 ஆம் ஆண்டு வெளியான எர்ரா மல்லேலு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். ஒரு கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களுக்கு எதிராகவும், பக்கத்துக் கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் ஆலை உரிமையாளருக்கும் எதிராக குரல் கொடுக்கும் இரு இளைஞர்களை சுற்றியதாக இதன் கதை உள்ளது. இப்படம் 1981 ஆகத்து 15 அன்று வெளியானது.
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "எரிமலை எப்படிப் பொறுக்கும்" | டி. எம். சௌந்தரராஜன், டி. எல். மகராஜன் | 6:20 | |||||||
2. | "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | 4:39 | |||||||
மொத்த நீளம்: |
10:59 |