சிவானந்தா இராஜாராம் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அறியப்படுவது | சமூக சேவை |
விருதுகள் | பத்மசிறீ |
சிவானந்தா இராஜாராம் (Sivananda Rajaram) என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு சமூக சேவகரும், அனாதைகளுக்காக செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனமான, சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொதுச்செயலாளரும் ஆவார்.[1][2][3][4][5] இவர் தனது பெற்றோரால் உருவாக்கப்பட்ட சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொறுப்புகளை அவர்களிடமிருந்து தனது 19 வயதில் ஏற்றுக் கொண்டார்.[3] இவரது முயற்சிகளின் விளைவாக தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள 25 கிராமங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிறுவனம் திகழ்ந்தது.[6] 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கெளரவித்தது..[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)