சிவாலிக் படிவப் பூங்கா (Shivalik Fossil Park) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நஹான் நகரிலிருந்து 14 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செயற்கை இழைக் கண்ணாடிகளால் அமைக்கப்பட விலங்கினங்கள் உள்ளன. மக்களிடம் அறிவியல் ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாக இவை அமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இப்பூங்காவானது 1969 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. 8.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட புதை பொருள் படிவங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டன.[1]