சீதா மாதா வனவிலங்கு சரணாலயம்

சீதா மாதா வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதாப்கர் மற்றும் சித்தாகர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும். இப் பகுதி ராஜஸ்தான் அரசினால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடான இப்பகுதி 422.95 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த சரணாலயம் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 40% வீதத்தைக் கொண்டுள்ளது. சீதா மாதா வனவிலங்கு சரணாலயம் 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

இருப்பிடம்

[தொகு]

இந்த சரணாலயம் 24 04 வடக்கு 74 25 கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இது ராஜஸ்தானின் பிரதாப்கர் மற்றும் சித்தர்கர் மாவட்டங்களில் அமைந்துள்ளது.[2] சராசரி உயரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 280 முதல் 600 மீட்டர் வரை காணப்படுகின்றது. ஆண்டுதோறும் சராசரியாக 756 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகின்றது. குளிர்காலத்தில் வெப்பநிலை மாறுபாடு 6 முதல் 14 பாகை செல்சியஸ் வரையிலும், கோடைக்கால வெப்நிலை 32 முதல் 45 பாகை வரையிலும் இருக்கும். [சான்று தேவை]

அடர்த்தியான மரத்தாலான சீதா மாதா வனவிலங்கு சரணாலயம் ஆரவல்லி மலைத்தொடர்கள் மற்றும் மால்வாபீடபூமியில் பரவியுள்ளது. ஜகாம், கர்மோய், சீதாமாதா, புதோ மற்றும் டாங்கியா ஆகிய ஆறுகள் காட்டின் வழியாக பாய்கின்றன. ஜகாம் ஆறு மிகப்பெரியது. இது பிரதாப்கரிலிருந்து 45 கி.மீ தொலைவிலும், பிரதேச தலைமையகத்திலிருந்து 108 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பிரதாப்கர் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தினசரி பேருந்து சேவைகள் சித்தோர்கர் (110 கி.மீ), பன்ஸ்வாரா (85 கி.மீ), உதய்பூர்(165 கி.மீ), துங்கர்பூர் (195 கி.மீ), ராஜ்சமண்ட் (133 கி.மீ), ஜோத்பூர் (435 கி.மீ), ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் (432 கி.மீ);எம்.பி., மற்றும் டெல்லியில் (705 கி.மீ) ரத்லம் (85 கி.மீ), மாண்ட்சவ்ர் (32 கி.மீ) ஆகிய நகரங்களுக்கு உண்டு.

பிரதாப்கர் நகரம் ஒரு ரயில் பாதையுடன் இணைக்கப்படவில்லை. அருகிலுள்ள ரயில் நிலையங்கள் மாண்ட்சவ்ர் (28 கி.மீ) மற்றும் சித்தோர்கர் (110 கி.மீ) ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் உதய்பூரில் உள்ள தபோக் விமான நிலையம் ஆகும். இது 145 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

தாவரங்கள்

[தொகு]

கட்டிட மதிப்புள்ள உயர்ந்த தேக்கு மரங்களைக் கொண்ட ஒரே வனப்பகுதி இதுவாகும். குடிசைகள் மற்றும் குக்கிராமங்களை நிர்மாணிக்க பூர்வீகவாசிகள் பயன்படுத்தும் தாவரங்கள் குறித்த இனவழி தகவல்களை ஆவணப்படுத்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரணாலயத்தில் பல்வேறு வகையான குடிசைகள் மற்றும் குக்கிராமங்களை நிர்மாணிக்க குறைந்தது 31 வெவ்வேறு தாவர இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு காணப்படும் தாவரங்களில் 108 வகையான உயர் மதிப்புள்ள மருத்துவ மூலிகைகளும், 17 ஆபத்தான தாவர இனங்களும் காணப்படுகின்றன.[3]

பறவைகளும், விலங்குகளும்

[தொகு]

இந்த பிராந்தியத்தில் ஏராளமான பறவைகள் காணப்படுகின்றன. ஏறத்தாழ 130 வகையான வலசை பறவைகள் உள்ளன.

இந்த சரணாலயத்தில் நான்கு கொம்புகள் கொண்ட மான், புள்ளி மான் உள்ளிட்ட பல்வேறு இன மான்கள் உள்ளன . கறகால் பூனை, காட்டுப்பன்றி, எறும்புண்ணி, இந்திய சிறுத்தை , கோடிட்ட கழுதைப்புலி, தங்க குள்ளநரி, வங்காள நரி, காட்டுப் பூனை, முள்ளம்பன்றி, சோம்பல் கரடி, நீலான் என்பன உள்ளன. [சான்று தேவை]

சுற்றுலாத் தலங்கள்

[தொகு]

இங்கு பண்டைய வால்மீகி ஆசிரமம், அனுமன் மற்றும் சீதாமாதா கோயில்கள் மற்றும் வரலாற்று, புராண முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்கள் உள்ளன. திகி மாக்ரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இந்த சரணாலயத்தில் சுவாரசியமான மற்றொரு இடம் லக்கியா பாட்டா ஆகும். இங்கு வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளின் வரைபடங்கள் பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சூலை மாதமும் சீதா மாதா கோவிலில் உள்ள சரணாலயத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. "Welcome to District Pratapgarh, Rajasthan". web.archive.org. 2011-08-17. Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Rajasthan" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Department of forest, Pratapgarh". Archived from the original on 2015-07-15.