சீதா மாயி கோயில் (Sītā Māī Temple) என்பது, வட இந்தியாவில் ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள சீதாமாய் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும். இது நிலோகேரியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், கர்னால் மற்றும் கைத்தால் இடையே பயணிக்க கிடைக்கக்கூடிய ஒரு மாற்று வழியில் அமைந்துள்ளது. இது, அயோத்தியின் ராமரின் தெய்வீக மனைவியான இந்து தெய்வமான சீதாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இக்கோயில் ராமநந்தி பைராகிஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இந்த கோயில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள முழு சன்னதியையும் உள்ளடக்கிய விரிவான அலங்காரம் குறிப்பிடத்தக்க அம்சமாகும். தனி செங்கற்களில் உள்ள ஆழமான கோடுகளால் சன்னதியின் வடிவம் உருவாகிறது, இது செங்கற்கள் எரிக்கப்படுவதற்கு முன்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, கோவிலை முதலில் வடிவமைத்திருக்க வேண்டும் என்றால், அவர்கள் எடுக்க வேண்டிய படிவங்கள் ஒவ்வொரு செங்கல்லுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். [1]
இராமாயண காவியத்தில், சீதையின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவள் பாவம் செய்யாததற்குச் சான்றாக, அவள் மார்பில் இளைப்பாற அனுமதிக்க, பூமித் தேவி பிளவுபட்ட இடத்தில் இந்த கோயில் உள்ளது என்று கருதப்படுகிறது.