சீதா ராமம் | |
---|---|
இயக்கம் | அனு ராகவப்புடி |
தயாரிப்பு | சி. அசுவனி தத் |
கதை | அனு ராகவப்புடி இராஜ்குமார் கந்தமுடி |
Dialogue by | அனு ராகவப்புடி ஜெய் கிருஷ்ணா இராஜ்குமார் கந்தமுடி |
இசை | விஷால் சந்திரசேகர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. எஸ். வினோத் சிரேயாசு கிருஷ்ணா |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் |
கலையகம் | வைஜயந்தி மூவீஸ் சுவப்னா சினிமா |
விநியோகம் | அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் லைக்கா தயாரிப்பகம் (தமிழ்நாடு) துல்கர் சல்மான் (கேரளம்) பென் ஸ்டுடியோஸ் (வட இந்தியா) |
வெளியீடு | 5 ஆகத்து 2022 |
ஓட்டம் | 163 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹30 கோடி[2][3] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹93.57 கோடி[4] |
சீதா ராமம் (Sita Ramam) என்பது 2022 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வரலாற்றுக் காதல் திரைப்படமாகும். இதை அனு ராகவபுடி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் மற்றும் சுவப்னா சினிமா தயாரித்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் ( தெலுங்கில் அறிமுகமானவர்), ராஷ்மிகா மந்தண்ணா, சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
1964 ஆம் ஆண்டு பின்னணியில், காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் அனாதையான இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ராம், என்பவர் சீதா மகாலட்சுமி என்பவரிடமிருந்து அநாமதேய காதல் கடிதங்களைப் பெறுகிறார். ராம் சீதாவைக் கண்டுபிடித்து அவனது காதலை முன்வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரல் 2021 இல் தொடங்கி ஏப்ரல் 2022 இல் முடிவடைந்தது. ஐதராபாத்து, காஷ்மீர் மற்றும் உருசியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, பி. எஸ். வினோத் மற்றும் சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். படம் 5 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது. திரையங்க வசூலில் ₹78 கோடிக்கு மேல் வசூலித்தது.
இத்திரைப்படம் 5 ஆகஸ்ட் 2022 அன்று தெலுங்கில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] படத்தின் இந்திப் பதிப்பு 2 செப்டம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது.[6]
படத்தின் எண்ணிம விநியோக உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது.[7] இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் 9 செப்டம்பர் 2022 முதல் தெலுங்கு மற்றும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் பதிப்புகளில் எண்ணிம முறையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.[8]
Made at a cost of Rs 30 crores, this film collapsed on its opening day itself.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)