தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | ஏப்ரல் 14, 1993 | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | தொழில்முறை மல்யுத்தம் | |||||||||||||
நிகழ்வு(கள்) | கட்டற்ற வகை மல்யுத்தம் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சீமா பிசுலா (Seema Bisla) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் மல்யுத்த வீரராவார்.மல்யுத்த வீரர்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் சீமா பிசுலா பிறந்துள்ள இவர் கட்டற்ற வகை மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். [1][2][3]
அங்கேரி நாட்டின் புடாபெசுட்டு நகரத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 55 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் பங்கேற்ற இவர் தனது முதல் போட்டியில் வெளியேற்றப்பட்டார். கசகிசுத்தானின் நூர்-சுல்தானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு உலக மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்றார். [4] அசர்பைசானின் மரியா சுடாட்னிக் வீராங்கனைக்கு எதிரான தனது முதல் போட்டியில் பிசுலா தோல்வியடைந்தார், பின்னர் தனது இரண்டாவது போட்டியில் மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்ற உருசியாவின் எகடெரினா போலேசுக்கால் வெளியேற்றப்பட்டார். [4]
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெறுகின்ற 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார் என்ற நம்பிக்கையில் கசகிசுத்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்றார். [5] முதலில் இந்த போட்டியில் பிசுலா தகுதி பெறவில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் நடைபெற்ற 2021 ஆசிய மல்யுத்த வெற்றியாளர் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். [6][7] 2021 மே மாதத்தில் பல்கேரியாவின் சோபியா நகரத்தில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். [8][9]
ஐரோப்பிய வெற்றியாளரான வெண்கலப் பதக்கம் வென்ற போலந்து நாட்டின் அன்னா லுகாசியாக்கை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற பிறகு சீமா பிசுலா உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் அரையிறுதிப் போட்டியில் மிகப்பெரிய தற்காப்புத் திறனைக் காட்டிய பின்னர் தனக்கென ஒரு ஒலிம்பிக் இருக்கையை பிசுலா பதிவு செய்தார். [10]
ஆண்டு | போட்டி | இடம் | முடிவு | நிகழ்வு |
---|---|---|---|---|
2021 | 2021 ஆசிய வெற்றியாளர் | கசகிசுத்தான், அல்மாட்டி | 3 ஆவது | 2021 கட்டற்ற வகை 50 கி.கி |
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)