சீர்திருத்த இயக்கம் Reformasi | |||
---|---|---|---|
ஏப்ரல் 1999-இல், அன்வார் இப்ராகிமின் தண்டனைக்குப் பிறகு கோலாலம்பூரில் தெரு ஆர்ப்பாட்டங்கள். | |||
தேதி | செப்டம்பர் 1998 | ||
அமைவிடம் | |||
காரணம் | * மகாதீர் அமைச்சரவையின் கீழ் உள்ள மத்திய அரசின் மீது அதிருப்தி * அம்னோ பிரிவுவாதம் | ||
முடிவு |
| ||
வழிநடத்தியோர் | |||
எண்ணிக்கை | |||
|
சீர்திருத்த இயக்கம் அல்லது ரிபார்மசி (ஆங்கிலம்: Reformasi movement; மலாய் மொழி: Reformasi (Malaysia); என்பது 1998-ஆம் ஆண்டில், மலேசியாவில் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டபோது அவரின் ஆதரவாளர்கள் மூலமாகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் ஆகும்.
இதன் மூலம் நீண்டகால கூட்டணி பாரிசான் நேசனல் அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. இந்த இயக்கத்தின் போராட்டங்கள், அன்வார் பதவியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை தொடர்ந்தன. [1]
இந்த இயக்கம் பின்பு மக்கள் நீதிக் கட்சி ஆக மாறியது. 2008 மலேசிய பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் 31 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் ஆளும் பாரிசான் நேசனல் அரசை, 1969 க்குப்பின் முதல் முறையாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழக்கச் செய்தது.