சீலா படேல் | |
---|---|
உலக நீர் வாரத்தின் 2011 ஆம் ஆண்டு தொடக்கக் கூட்டத்தில் படேல் பேசுகிறார் | |
பிறப்பு | 1952 (வயது 70 - 71) |
கல்வி நிலையம் | டாட்டா சமூக அறிவியல் கழகம் |
சீலா படேல் (Sheela Patel) ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு பிறந்தார். சேரிகள் மற்றும் குடிசை நகரங்களில் வாழும் மக்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார்.
1974 ஆம் ஆண்டில், மும்பை மாநகராட்சியில் உள்ள டாடா சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் நாக்பாதா அக்கம் பக்கத்து வீடு என்ற சமூக மையத்தில் ஈடுபட்டார்.[1]
பிரேமா கோபாலனுடன், படேல் 1984 ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சியில் நடைபாதையில் வசிப்பவர்களுக்காக ஒரு வக்கீல் குழுவாக அமைக்கப்பட்ட பகுதி வள மையங்களை மேம்படுத்துவதற்கான சமூகத்தின் நிறுவன இயக்குநராக உள்ளார். பகுதி வள மையங்களை மேம்படுத்துவதற்கான சமூகம் இன்றுவரை இந்திய நாட்டிலும் மற்றும் மூன்றாம் உலகம் முழுவதிலும் உள்ள சேரி வளர்ச்சி அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.[2] 2000 ஆம் ஆண்டில், பகுதி வள மையங்களை மேம்படுத்துவதற்கான சமூகம் ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்ற விருதைப் பெற்றது.[3]
படேல் தேசிய குடிசைவாசிகள் கூட்டமைப்பு மற்றும் மகிலா மிலன் ஆகிய இரண்டு சமூக அடிப்படையிலான குழுக்களுடன் இந்திய நகரங்களில் உள்ள ஏழைகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். இவர் சவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் பணிக்காக தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.
இவர் வீட்டு உரிமைகளுக்கான ஆசிய கூட்டமைப்பு, ஆசிய பெண்கள் மற்றும் தங்குமிடம் நெட்வொர்க் மற்றும் சுவயம் சிக்சன் பிரயோக், மகாராட்டிராவில் 600 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள் கூட்டாக இணைந்து செயல்படும் அமைப்பு ஆகியவற்றை நிறுவியுள்ளார்.[4]
படேல், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 33 நாடுகளில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகளின் வலையமைப்பான சேரி ட்வெல்லர்சு இன்டர்நேசனலின் நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவர் ஆவார்.
2011 ஆம் ஆண்டு: பத்மசிறீ விருது, இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருது.[5]
2009 ஆம் ஆண்டு: டேவிட் ராக்பெல்லர் பிரிட்சிங் லீடர்சிப் விருது [6]
2000 ஆம் ஆண்டு : ஐக்கிய நாடுகள் அவை - காபிடேட் சுருள் மரியாதை விருது