சீவி யூன் (Zhiwei Yun செப்டம்பர் 1982) என்பவர் யேல் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆவார். எண் தேற்றம், அல்சிப்ரா சாமெட்ரி போன்ற கணிதப்பிரிவுகளில் முனைந்த அறிவு கொண்டவர்.[1]
யேல் பல்கலைக்கழகத்தில் பணி செய்வதற்கு முன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் மற்றும் இணைப்பேராசிரியராக இருந்தார்(2012-2016). அதற்கு முன் 2010-2012 இல் மசாச்சூட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.
சீனாவில் பிறந்த சீவி யூன் 2000 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கெடுத்துப் தங்கப்பதக்கம் பெற்றார்.[2] 2004 இல் பீகிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றார்.
கணிதத்துறை வளர்ச்சி சாதனைகளைப் பாராட்டி சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு இவருக்கு 2012 இல் வழங்கப்பட்டது.[3]