சூஃபி இசை (Sufi music) சூஃபியிசத்தைச் சார்ந்த ஒர் இசைவகை ஆகும். இவ்விசை சூஃபி கவிஞர்கள் ரூமி, அஃபேசு, புல்லெ சா மற்றும் குவாஜா குலாம் பரீத் போன்றவர்களின் ஆக்கங்களினால் ஊக்குவிக்கப்பட்டது.
இவ்வகை இசையில் கவ்வாலி வடிவம் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் மிகவும் பரவலாக அறியப்படும். மிகவும் மெதுவான தாளத்தில் துருக்கிய புல்லாங்குழல் ஓசையுடன் சுழன்றாடும் சூஃபிக்களின் சமயச்சடங்குகள் பிரபலமானவை. மேற்கு ஆபிரிக்காவின் ஞாவா இவ்வகையைச் ஒத்ததே. இந்தோனேசியா,ஆப்கானித்தான் முதல் மொரோக்கோ வரையிலுமுள்ள சூஃபி மக்கள் தங்கள் சமயத்தின் மையமாக இந்த இசையைக் கொண்டுள்ளனர். ஆயினும் சில சமயத்தலைவர்கள், தூய இசுலாம் வழிகளைப் போல இசை இறைவனை அடைவதற்கு தடையாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.
சூஃபி கவிஞர்களின் பல பாடல்களைக் கொண்டு, தனியாக தாளக்கருவிகளின் துணையுடன், சூஃபி காதல் கீதங்கள் பெரும்பாலும் கசல் மற்றும் கஃபி வடிவில் பாடப்படுகின்றன.