சுகன்யா வர்மா Sukanya Verma | |
---|---|
பிறப்பு | மும்பை, இந்தியா |
பணி | பத்திரிகையாளர்,திரைப்பட விமர்சகர் |
வலைத்தளம் | |
www |
சுகன்யா வர்மா (Sukanya Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். ரெடிப்.காம் வலைத்தளத்துடன் முதன்மை திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.[1]:{{{3}}} தி இந்து நாளிதழில் சிறிது காலம் எழுத்தாளராக பல பத்திகளை எழுதியுள்ளார்.[2]:{{{3}}} 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திரைப்பட விமர்சகர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]:{{{3}}}[4]:{{{3}}}
சுகன்யா வர்மா இந்தியாவின் மும்பை நகரத்தில் பிறந்தார். மும்பை புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5]:{{{3}}}
பதினேழு ஆண்டுகளாக ஒரு மூத்த திரைப்பட விமர்சகர், இசை விமர்சகர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் வினாடி வினா தொகுப்பாளராக ரெடிப்.காம் இணையதளத்திலும் இதன் சகோதர வெளியீடான வெளிநாட்டில் இந்தியாவிலும் பணியாற்றுகிறார்.[5]:{{{3}}}
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 5 ஆவது இயாக்ரன் திரைப்பட விழாவில் சுகன்யா வர்மாவுக்கு சிறந்த விமர்சகர் விருது வழங்கப்பட்டது.[6]:{{{3}}}[5]:{{{3}}}