ஸ்கூடாய் Skudai | |
---|---|
நகர்ப்புறம் | |
ஆள்கூறுகள்: 1°32′N 103°40′E / 1.533°N 103.667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,10,000 |
• மதிப்பீடு () | 2,10,000 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 81300 |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
சுகூடாய் அல்லது ஸ்கூடாய் (ஆங்கிலம்: Skudai; மலாய்: Skudai; சீனம்: 士姑来; ஜாவி: سكوداي) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில், இஸ்கந்தர் புத்திரி மாநகர வளாகத்திற்குள் அமைந்து உள்ள ஒரு நகர்ப்பகுதி.
தென்மேற்கு ஜொகூர் பெரு வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கூடாய் நகர்ப்பகுதி அமைகின்றது. இங்கு ஜொகூர் பாரடிகம் பேரங்காடி (Paradigm Mall Johor) வளாகம்; மற்றும் இஸ்கந்தர் புத்திரி நகராண்மைக் கழகத்தின் தலைமையகம் (Iskandar Puteri City Council) உள்ளன.[1][2]
மேலும் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் வளாகத்தின் தலைமை இடமாகவும் ஸ்கூடாய் நகர்ப்பகுதி அமைகின்றது.[3]
மலேசியாவிலேயே அதிகமான தமிழ் மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி இங்குதான் உள்ளது. இந்தப் பள்ளியில் 1970 மாணவர்கள் பயில்கிறார்கள்.
ஜொகூர் மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும் ஸ்கூடாய் வளாகம் அமைகின்றது. ஸ்கூடாய் குடியிருப்பாளர்களில் பெரும்பாலானவர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (65%). அதைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள் (22%). மூன்றாவதாக இந்தியர்கள் (12%).
1900-களின் பிரித்தானிய காலனித்துவ காலத்தில், ஸ்கூடாய் வட்டாரத்தில் ஒரு ரப்பர் தோட்டம் இருந்தது. அதன் பெயர் லிண்டன் தோட்டம் (Ladang Linden). அந்தத் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்களின் பிள்ளைகள் படிக்க ஒரு தமிழ்ப்பள்ளி தேவைப்பட்டது.
தமிழ் மொழியின் மீது இருந்த தாக்கத்தினால், தோட்டத் தொழிலாளர்களின் முயற்சியால் ஒரு தமிழ்ப்பள்ளி உருவாக்கப்பட்டது. அந்தப் பள்ளிக்குச் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி என பெயரிடப்பட்டது. ஏற்கனவே அது ஒரு நாடக மேடை. ஒரு சிறிய குடிசை.
அங்கேதான் இப்போதைய துன் அமீனா தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில் 15 மாணவர்களுடன் தோற்றுவிக்கப் பட்டது. என்.கே.ஆர். ராமசாமி நாயுடு என்பவர் முதல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[4]
1948-ஆம் ஆண்டில், தோட்ட நிர்வாகியின் வீடு, தமிழ்ப்பள்ளியின் கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டது. 1958-ஆம் ஆண்டில், மாணவர்களின் எண்ணிக்கை 25-இல் இருந்து 50 மாணவர்களாக அதிகரித்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2-ஆக உயர்ந்தது. பள்ளியின் பெயர் லிண்டன் தோட்டத் தொடக்கத் தமிழ்ப்பள்ளி என மாற்றம் கண்டது.
1961 - 1967 வரையிலான காலக் கட்டத்தில் மாணவர் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்தது. ஆசிரியர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது. 1966-ஆம் ஆண்டில், கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.
துன் அமீனா தமிழ்ப்பள்ளி தொடர்பான படங்கள்
1. துன் அமீனா தமிழ்ப்பள்ளி
2. துன் அமீனா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்
2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் 1970 மாணவர்கள் பயில்கிறார்கள். 98 ஆசிரியர்கள் சேவை செய்கிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]
ஸ்கூடாய வட்டாரத்தில் மற்றும் ஒரு தமிழ்ப்பள்ளி ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியும் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து உள்ளது. 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தப் பள்ளியில் 683 மாணவர்கள் பயில்கிறார்கள். 45 ஆசிரியர்கள் சேவை செய்கிறார்கள்.[6]
மலேசியாவில் மிகப் பழமையான தோட்டங்களில் ரினி தோட்டமும் ஒன்றாகும். 1900-ஆண்டுகளில் உருவானது. ரினி தோட்டம் ஒரு ரப்பர் தோட்டம். பின்னர் எண்ணெய் பனை தோட்டமாக மாற்றம் கண்டது. 1996-க்குப் பின்னர் இந்த தோட்டம் முத்தியாரா ரினி (Mutiara Rini) என்று அழைக்கப் படுகிறது.[7]
1985-ஆம் ஆண்டில், ரினி தோட்டத்தில் ஒரு வீட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி, லீமா கெடாய் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய மாற்றுப் பள்ளி, இப்போதைய முத்தியாரா ரினி வீட்டு மேம்பாட்டாளரால் கட்டப்பட்டது. பள்ளியின் பரப்பளவு 1 ஹெக்டேர். 8 வகுப்பறைகளைக் கொண்டது.
புதிய பள்ளி 04.11.1996-ஆம் தேதி செயல்படத் தொடங்கியது. 2000-ஆம் ஆண்டில், நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் போன்றவை; பொதுமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளின் உதவியுடன் கட்டப்பட்டன. மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்தது
பின்னர் 2001-ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2003-ஆம் ஆண்டு பள்ளி உணவகம் புதுப்பிக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டின் இறுதியில் கணினிக் கல்விக்காக மற்றொரு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.[8]
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்பான படங்கள்
1. SJKT-Ladang-RINI-ICT-Lab
2. SJK (T) Ladang Rini