சுங்கை ஊடாங்
Sungai Udang | |
---|---|
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°16′N 102°09′E / 2.267°N 102.150°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1600 |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | அபு பாக்கார் முகமட டியா (2013 - 2018) |
• சட்டமன்ற உறுப்பினர் | இட்ரிஸ் ஹருண் (2013 - 2018) முதலமைச்சர் |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 76300/76200 |
இடக் குறியீடு | +06 |
சுங்கை ஊடாங் (ஆங்கிலம், மலாய் மொழி: Sungai Udang) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும். மலேசியாவின் மிகப் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்றான திரண்டாக் இராணுவ முகாம் (Terendak Camp) இங்கே அமைந்து உள்ளது. இராணுவ அதிரடிப்படையின் வளாகம் என்றும் புகழாரம் செய்யப்படுகிறது.[1]
1987-ஆம் ஆண்டு, இங்கு பெட்ரோனாஸ் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை[2] உருவாக்கப்பட்டது. இருப்பினும், 1997-ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்த நகரம் துரிதமாக வளர்ச்சி கண்டது.
இங்கு திரண்டாக் இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவத்தினரின் குடும்பங்களே பெரும்பான்மையாக உள்ளன. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இங்கு நிரந்தரமாகத் தங்கி விட்டனர். இரு வகையான இராணுவ முகாம்கள் உள்ளன. திரண்டாக் இராணுவ முகாம்; சுங்கை ஊடாங் இராணுவ முகாம், ஆகியவையே அந்த முகாம்கள் ஆகும்.
நகரம்/சிறுநகரம் | சுங்கை ஊடாங்கில் இருந்து (கி.மீ.) |
---|---|
கோலாலம்பூர் | 111.0 |
சிரம்பான் | 85.0 |
மஸ்ஜித் தானா | 8.0 |
அலோர் காஜா | 25.0 |
கெமிஞ்சே | 56.0 |
தம்பின் | 35.0 |
போர்டிக்சன் | 62.0 |
தஞ்சோங் பிடாரா | 3.0 |
ரெம்பாவ் | 54 |
தொலைவில் இருக்கிறது.
சுங்கை ஊடாங்கிற்கு மிக அருகில் இருப்பது மஸ்ஜித் தானா, மலாக்கா நகரங்களாகும்.