சுங்கை சிப்புட் (P062) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Sungai Siput (P062) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கோலாகங்சார் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 72,395 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | சுங்கை சிப்புட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | சுங்கை சிப்புட், சிம்மோர், கோலாகங்சார், தஞ்சோங் ரம்புத்தான், தைப்பிங், பாடாங் ரெங்காஸ், சவுக், கிந்தா பள்ளத்தாக்கு |
பரப்பளவு | 1,850 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | கேசவன் சுப்ரமணியம் (Kesavan Subramaniam) |
மக்கள் தொகை | 86,815 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Siput; ஆங்கிலம்: Sungai Siput Federal Constituency; சீனம்: 和丰国会议席) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P062) ஆகும்.[7]
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சுங்கை சிப்புட் நகரம் பேராக் மாநிலத்தில் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் கோலாகங்சார் ஆகும். இதற்கு ’சங்கு நதி’ எனும் அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு.
இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை உறுதி செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா விடுதலை பெற்றதில் இருந்து இந்தத் தொகுதி இந்தியர்களின் அரசியல் கோட்டையாக இருந்து வருகிறது.
மலேசிய அரசியலில் முக்கியமான தலைவர்கள் சிலரை உருவாக்கிக் கொடுத்த பெருமை இந்த சுங்கை சிப்புட் நகரத்தைச் சாரும். அமரர் துன் சம்பந்தன், துன் சாமிவேலு, டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், துன் லியோங் இயூ கோ, தோக் பாங்கு அமீட் போன்றவர்கள் இந்த நகரில் இருந்து தான் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர்.
துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள் சுங்கை சிப்புட்டில் பிறந்து வளர்ந்தவர். இவர் ம.இ.கா எனும் மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். இவர் மலேசிய அரசாங்கத்தில் பல அமைச்சுகளில் அமைச்சர் பதவியை வகித்துள்ளார். மலாயாவில் முதன்முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தின் கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மலேசிய விடுதலை பெற, நாட்டின் மூன்று முதன்மைத் தலைவர்கள் இலண்டனுக்குச் சென்று விடுதலை உடன்படிக்கையில் (Merdeka Agreement) கையெழுத்திட்டனர். அந்த மூவரில் இந்தியர்களின் தலைவராக துன் சம்பந்தன் கையெழுத்திட்டார். இது மலேசிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஆகும்.[8][9]
1960-ஆம் ஆண்டுகளில், மலேசிய இந்தியர்களை ஒன்றுபடுத்தி அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்து வெள்ளி சேகரித்தார். அந்த முதலீட்டைக் கொண்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்தார். தற்போது இந்தச் சங்கம் ஆசியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.[10]
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
72,395 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
52,725 | 71.34% | ▼ - 8.04% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
51,802 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
85 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
991 | ||
பெரும்பான்மை (Majority) |
1,846 | 2.55% | ▼ - 10.57 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [13] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
கேசவன் சுப்ரமணியம் (Kesavan Subramaniam) |
பாக்காத்தான் | 51,802 | 21,637 | 41.77% | - 6.95% ▼ | |
ச. விக்னேசுவரன் (Vigneswaran Sanasee) |
பாரிசான் | - | 19,791 | 38.21% | - 2.61 % | |
இருதயநாதன் கேப்ரியல் (Irudhanathan Gabriel) |
பெரிக்காத்தான் | - | 8,190 | 15.81% | + 15.81% | |
அகமது பவுசி முகமது ஜாபர் (Ahmad Fauzi Mohd Jaafar) |
தாயக இயக்கம் | - | 784 | 1.51% | + 1.51% | |
ஆர். இந்திராணி (R. Indrani) |
சுயேச்சை | - | 767 | 1.48% | + 1.48% | |
பகருதீன் கமாருதீன் (Baharudin Kamarudin) |
சுயேச்சை | - | 598 | 0.15% | + 0.15% | |
ராஜா நரசிம் (Rajah Narasaim) |
சுயேச்சை | - | 35 | 0.07% | + 0.07% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)