சுசாந்தா போர்கோகைன் Sushanta Borgohain | |
---|---|
![]() | |
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 நவம்பர் 2021 | |
முன்னையவர் | குசால் தோவாரி |
தொகுதி | தௌரா |
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | குசால் தோவாரி |
பின்னவர் | குசால் தோவாரி |
தொகுதி | Thowra |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 ஏப்ரல் சிவசாகர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அங்கிதா சங்மாயி |
வாழிடம் | திமோவ் ராய்ச்சாயி, அசாம் |
கல்வி | பி.ஏ. |
முன்னாள் மாணவர் | வி.கே.வி. திக்பாய்; திரிவேணி அகாதமி ,தமிழ்நாடு; நந்தலால் போர்கோகைன் நகரக் கல்லூரி (பி.ஏ); தில்லி பல்கலைக்கழகம் |
தொழில் | வணிகர் |
சுசாந்தா போர்கோகைன் (Sushanta Borgohain) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிவசாகரில் பிறந்த இவர் ஒரு மோட்டார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். வி.கே.வி., திக்பாயில் இவர் ஆரம்பக் கல்வியைப் பெற்றார், பின்னர் தமிழ்நாட்டின் திரிவேணி அகாதமியில் மேல்நிலைக் கல்வியைப் கற்றார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக தௌரா தொகுதியில் போட்டியிட்டு அசாம் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] முன்னதாகவும் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இப்பணியில் இருந்தார்.[3][4] ஜூன் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து கட்சியில் உள்ள உள் வேறுபாடுகள் காரணமாக கட்சியை விட்டு விலகினார். அசாம் முதல்வர் இமந்த பிசுவா சர்மா முன்னிலையில் பாரதிய சனதா கட்சியில் இவர் இணைந்தார்.[5]