சுசீலா சரோஜ்

Sushila Saroj
பிறப்பு1 ஏப்ரல் 1951 (1951-04-01) (அகவை 73)[1]
கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விமுதுகலை, இளங்கலை கல்வியியல் & இளங்கலைச் சட்டம்[1]
பணிஅரசியல்வாதி, சமூக சேவகர் & விவசாயி
செயற்பாட்டுக்
காலம்
1993–முதல்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி (SP)[1]
பெற்றோர்மகாதேவ் பிரசாத் (தந்தை) & அனுராஜ் தேவி (தாய்)[1]
வாழ்க்கைத்
துணை
இராம் பிரகாசு சரோஜ்[1]
பிள்ளைகள்3 மகள்கள்

சுசீலா சரோஜ் (Sushila Saroj) இந்தியாவின் 15வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக சரோஜ் உள்ளார். மோகன்லால்கஞ்ச் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

கல்வி

[தொகு]

சரோஜ் முதுகலை, இளங்கலைச் சட்டம் பட்டத்தினை கோரக்பூர், ரோகில்கண்ட், கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். இவர் 13வது மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் விரங்கனா உதாதேவி பாசி ஸ்மாரக் சங்கதன் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் பாசி அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

வகித்த பதவிகள்

[தொகு]
# முதல் வரை பதவி
01 1993 1995 உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் (21 மாதங்கள்)
02 1995 1999 மாநில சமூக நலத்துறை அமைச்சர், உத்தரபிரதேசம்
03 1999 2004 13வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
04 1999 2004 உறுப்பினர், ரயில்வே குழு
05 1999 2004 உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு
06 1999 2004 உறுப்பினர், ஆலோசனைக் குழு, தொழிலாளர் அமைச்சகம்
07 2009 15வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
08 31-ஆகத்து-2009 உறுப்பினர், ரயில்வே குழு
09 04-செப்-2009 உறுப்பினர், பாராளுமன்ற வளாக பாதுகாப்பு குழு
10 23-செப்-2009 உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு
11 23-செப்-2009 உறுப்பினர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
12 23-செப்-2009 சுற்றுலா குழு உறுப்பினர்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]