வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | உதயன் பத்திரிகைக் குழுமம் |
வெளியீட்டாளர் | மாஸ் மீடியா சின்டிகேட் (பிரைவேட்) லிமிட்டெட் |
ஆசிரியர் | என். பத்மசீலன் |
தலைமை ஆசிரியர் | கே. கே. இரத்தினசிங்கம் |
முகாமைத்துவ ஆசிரியர்கள் | ஈ. சரவணபவன் |
செய்தி ஆசிரியர் | எஸ். அற்புதன் |
நிறுவியது | செப்டம்பர் 10, 2000 |
அரசியல் சார்பு | நடுநிலை |
மொழி | தமிழ் |
தலைமையகம் | 85 ஜெயந்தா மல்லிமராச்சி மாவத்தை, கொழும்பு, இலங்கை |
சகோதர செய்தித்தாள்கள் | உதயன் (யாழ்ப்பாணம்) |
இணையத்தளம் | sudaroli.com |
சுடர் ஒளி இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 2000 ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. இதன் சகோதரப் பத்திரிகை உதயன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றது. பல தடவைகள் இப்பத்திரிகை நிறுவனம் தாக்குதல்களுக்கு உள்ளானது. இப்பத்திரிகைப் பணியாளர்கள் பலர் துணை இராணுவக் குழுக்களினாலும், வேறு பல ஆயுதக் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
சுடர் ஒளி 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 இல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 2001 அக்டோபர் 29 முதல் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டில் இதன் ஆசிரியராக ந. வித்தியாதரன் பொறுப்பேற்றார்.
2006 சூலையில் சுடர் ஒளி, மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் அரசு சார்பு துணை இராணுவக் குழுக்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அவற்றின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.[1] இவ்விரு மாவட்டங்களிலும் இப்பத்திரிகைகள் பின்னர் விற்பனையை ஆரம்பித்திருந்தாலும், அவற்றின் விற்பனை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன.[2]
ஆசிரியர் ந. வித்தியாதரன் 2009 பெப்ரவரி 26 இல் கொழும்பு தெகிவளையில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது காவல்துறையினரால் ஆணை ஏதும் இல்லாமல் கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டார்.[3][4] பல மனித உரிமை அமைப்புகள் இவரது கைதுக்கு எதிராகக் குரல் எழுப்பின. விடுதலைப் புலிகள் 2009 இல் கொழும்பின் மீது நடத்திய வான் தாக்குதலில் இவருக்கும் பங்கிருந்ததாக அரசு குற்றம் சாட்டியது.[5][6] சாட்சியங்கள் எதுவும் இல்லாததால் இவர் 2009 ஏப்ரல் 24 அன்று விடுதலை செய்யப்பட்டார்.[7][8]
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)