சுதந்திரத்தின் பிரதிநிதியாக, முக்கியமாக மேற்குலகக் கலாசாரத்தில் அமைக்கப்படும் ஒரு மங்கை 'சுதந்திரத் திருமகள்'. இரோம சாம்ராச்சியத்திலிருந்து பிரித்தானிய சாம்ராச்சியம் வரை வெவ்வேறு விதமாக சுதந்திரத் திருமகள் படைக்கப்பட்டுள்ளார்.
இந்திய சுதந்திரத் திருமகளாக பாரதி (பொதுவாக அன்னை பாரதம்) இயங்குகிறார். பாண்டிய இராச்சியத்திற்கு முன்பே இச்சுதந்திரத் திருமகள் கௌரவப்படுத்தப்பட்டார்.
1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும்பொழுது, பொதுவுடமை (கம்யூனிஸ்ட்) ஒரு கட்சி அரசிலிருந்து விடுதலைபெற, தியனன்மென் சதுக்கத்தில் காகிதத்தால் சிலை ஒன்று உருவாக்கபட்டது. மின்ஸு நுஷேன் எனப்படும் இக்காகிதச்சிலையின் பெயர், தமிழில் ஜனநாயகத் திருமகள் எனவாகும். கல்லூரி மற்றும் மேல்நிலை மாணவர்கள் உண்டாகிய இச்சிலையை மக்களின் சுதந்திரப்படை அழித்தது.