சுதர்சன் பகத், ஜார்க்கண்டச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969ஆம் ஆண்டின் அக்டோபர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, லோஹர்தகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
- 2000-2005: ஜார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினர்
- 2000-2003: ஜார்க்கண்டு அரசின் மனிதவளத் துறை அமைச்சர்
- 2003-2004: ஜார்க்கண்டு அரசின் அமைச்சர் (கலை, பண்பாடு, கால்நடை, பால்வளம், விளையாட்டுத் துறைகள்)
- 2004-2005: ஜார்க்கண்டு அரசின் சமூக நலத்துறை அமைச்சர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
- 28 மே 2014 - 9 நவம்பர் 2014: ஒன்றிய அரசின் அமைச்சர் (சமூக நீதித் துறை)
- 10 நவம்பர், 2014 முதல்: ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்