சுதா கவுல் Sudha Kaul | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | சமூகப்பணி |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
Official web site |
சுதா கவுல் (Sudha Kaul) ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் கல்வியாளராவார். மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக இவர் செய்த சேவைகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.[1] கவுல் இந்திய பெருமூளை வாத நிறுவனத்தின் துணைத் தலைவராகவும்,[2] சிறப்புக் கல்வி மையத்தின் நிறுவனர முதல்வராகவும் உள்ளார்.[1] மான்செசுட்டர் பெருநகர பல்கலைக்கழகத்தில் கவுல் மிகைப்படுத்தல் மற்றும் மாற்று தொடர்பாடல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இந்த பாடத்தில் பல புத்தகங்களையும் கவுல் எழுதியுள்ளார்.[3] பல அரசாங்கக் குழுக்களில் இணைந்து கவுல் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் மாற்றுத்திறன் குடிமக்களுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்கக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[1] 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை கவுலுக்கு வழங்கி சிறப்பித்தது.[4]