சுதாரக் ஓல்வே | |
---|---|
பிறப்பு | 19-மார்ச்-1966 (வயது 57) அகோலா, மகாராட்டிரம், இந்தியா |
பணி | புகைப்பட பத்திரிக்கையாளர் |
அறியப்படுவது | புகைப்பட இதழியல் |
விருதுகள் | பத்மசிறீ |
சுதாரக் ஓல்வே (Sudharak Olwe) இந்திய நாட்டின் மகாராட்டிரம் மாநிலத்தின் மும்பை பகுதியைச் சேர்ந்த ஒரு ஆவண புகைப்படக் கலைஞர் ஆவார். 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி பிறந்தார். இவரது படைப்புகள் தேசிய வெளியீடுகளில் இடம்பெற்று மும்பை, தில்லி, மால்மோ (சுவீடன்), லிசுபன், ஆம்சுடர்டாம், லாசு ஏஞ்சல்சு, வாசிங்டன் மற்றும் டாக்கா ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1] [2] [3]
வாழ்க்கையின் சோகமான சமூக நாடகத்தின் நிர்வாண யதார்த்தத்தை வெளிப்படுத்தியதற்காக இவர் இந்திய துணைக்கண்டத்தில் மகத்தான பாராட்டையும் பிரமிப்பையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டில், தேசிய புவியியல் இதழின் "அனைத்து சாலைகள் புகைப்படம் எடுக்கும் திட்டம்" விருது பெற்ற நான்கு பேரில் இவரும் ஒருவர் ஆவார். [4] 2016 ஆம் ஆண்டு சமூகப் பணிக்காக இந்திய நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [5]
சுதாரக் ஓல்வே இந்திய நாட்டின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தினை சார்ந்தவர் ஆவார். மும்பையில் உள்ள சர் சேசே அப்ளைடு ஆர்ட் நிறுவனத்தில் 1986 ஆம் ஆண்டு புகைப்படக் கலையில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார். மேலும் மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் திரைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு டிப்ளமோ பட்டம் பெற்றார். ஆனால் அவர் தனது வெற்றிக்கு கல்வித் தகுதியை விட அனுபவத்தை வரவு வைக்கிறார். மும்பையில் உள்ள தனது வீட்டிலிருந்து தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்கு சில காலம் ஓடிப்போனார். இவரது படங்களில் அவர் சித்தரிக்கும் சாலை வாழ்க்கையைப் பற்றி இவருக்குக் கற்றுக் கொடுத்தது. புகைப்படக்கலை ஊக்குவிப்பு அறக்கட்டளைக்கு இவர் தலைமை தாங்குகிறார். இது நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களிடையே புகைப்படக்கலை பற்றிய அறிவைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.