சுதின் தவாலிகர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் கோவா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1999 | |
துணை முதலமைச்சர்-கோவா | |
பதவியில் 19 மார்ச் 2019 [1] – 27 மார்ச் 2019 [2] | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 நவம்பர் 1956 பாண்டா, கோவா, போர்த்துகேய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி |
துணைவர் | ஜோதி தவாலிகர் |
முன்னாள் மாணவர் | செளகுலே கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
சுதின் மாதவ் தவாலிகர் (Sudin Dhavalikar) என்றும் சுதின் அல்லது 'ராமகிருஷ்ணா' தவாலிகர் என்றும் அழைக்கப்படுபவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மார்கெய்ம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கோவா சட்டமன்றத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தவாலிகர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசுகளில் முக்கிய இலாகாக்களை வகித்து அமைச்சராக இருந்துள்ளார். இவர் பொதுப்பணித் துறை[3], போக்குவரத்து மற்றும் நதி வழிசெலுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.[4]
இவர் 1961-ல் போர்த்துகேய காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு கோவாவின் மகாராட்டிரவாதி கோமந்தக் கட்சியின் உறுப்பினர் ஆனார்.[5] கடந்த 20 ஆண்டுகளாகக் கட்சியில் பல சோதனைகளுக்குப் பிறகு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார்.
தவாலிகர் கல்வித் தகுதி குறித்து தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பொய் கூறியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.[6][7][8] ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த இந்த வழக்கை போண்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[9]