சுதிர்கு. ஜெயின் (Sudhir K. Jain)(பிறப்பு 1959) எனக் குறிப்பிடப்படும் சுதிர் குமார் ஜெயின், என்பவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் 28வது துணைவேந்தர் ஆவார்.[4] கல்வியில் குடிமைப் பொறியியலாளரான இவர், காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன இயக்குநராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.[5] இவர் ஈஸ்மிக் வடிவமைப்பு குறியீடுகள், கட்டிடங்களின் இயக்கவியல் மற்றும் பூகம்பத்திற்குப் பிந்தைய ஆய்வுகள் ஆகிய துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டார்.[6] இவை தவிர, வளரும் நாடுகளில் கவனம் செலுத்தும் பூகம்பப் பொறியியலில் கற்பித்தல், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஜெயின் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.[7] இவர் இந்தியத் தேசிய பொறியியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஆவார்.[2] வளரும் நாடுகளில் நிலநடுக்கப் பொறியியலில் தலைமை தாங்குவதற்காக இவர் ஐக்கிய நாடுகளின் தேசிய பொறியியல் கழகத்தின் (2021) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயின் 2014 முதல் 2018 வரை பன்னாட்டு நிலநடுக்கப் பொறியியல் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[8][9] 2019 முதல் இன்ஃபோசிஸ் பரிசுக்கான பொறியியல் மற்றும் கணினி அறிவியல் நடுவர் மன்றத்திலும் இவர் பணியாற்றினார்.[10]
↑Jain, Sudhir K.; Murty, C.V.R; Rai, Durgesh C. (2008). Engineering Response to Hazards of Terrorism. NICEE. ISBN978-8190613019.
↑Jain, Sudhir K. (4 April 2016). "Earthquake safety in India: achievements, challenges and opportunities". Bulletin of Earthquake Engineering14 (5): 1337–1436. doi:10.1007/s10518-016-9870-2.
↑Mondal, Goutam; Prashant, Amit; Jain, Sudhir K. (January 2012). "Simplified seismic analysis of soil–well–pier system for bridges". Soil Dynamics and Earthquake Engineering32 (1): 42–55. doi:10.1016/j.soildyn.2011.08.002.
↑Kaushik, Hemant B.; Rai, Durgesh C.; Jain, Sudhir K. (27 December 2019). "Code Approaches to Seismic Design of Masonry-Infilled Reinforced ConcreteFrames: A State-of-the-Art Review". Earthquake Spectra22 (4): 961–983. doi:10.1193/1.2360907.
↑Singh, Raghvendra; Roy, Debasis; Jain, Sudhir K. (August 2005). "Analysis of earth dams affected by the 2001 Bhuj Earthquake". Engineering Geology80 (3–4): 282–291. doi:10.1016/j.enggeo.2005.06.002.
↑Dutta, Sekhar Chandra; Murty, C.V.R.; Jain, Sudhir K. (25 June 2000). "Seismic torsional vibration in elevated tanks". Structural Engineering and Mechanics9 (6): 615–636. doi:10.12989/sem.2000.9.6.615.