சுநாதவினோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]
- இது ஒரு ஔடவ இராகம்.
- ரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
- சுநாதவினோதினி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் தைவத, நிஷாத முறையே கிரக பேதத்தின் வழியாக சிவரஞ்சனி, ரேவதி ஜன்னிய இராகங்களை கொடுக்கும்.
- ↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications