சுந்தன் | |
---|---|
![]() பன்றி இறைச்சி சமைக்கும் சுந்தன் ஓவியம், ஆயுத்தாய நகரம், தாய்லாந்து | |
சுய தரவுகள் | |
சமயம் | பௌத்தம் |
Profession | கொல்லன், உபாசகன் |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
Profession | கொல்லன், உபாசகன் |
பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த மகாபரிநிர்வாண சூத்திரங்களில், சுந்தன் (Cunda) ஒரு இரும்பு கொல்லன் என்றும், கௌதம புத்தர் இறுதியாக பவா நகரத்தின் சுந்தனிடமிருந்தே உணவு பெற்று உண்டார் என்றும்; அதன் பின்னர் புத்தர் கடும் வயிற்று நோயால் அவதிப்பட்டு, சில நாட்களில் புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்தார் என்று கூறுகிறது. [1]பின்னர் சுந்தன், புத்தரின் உபாசகர்களில் ஒருவராக விளங்கினார்.
சுந்தன் வழங்கிய உணவால் புத்தருக்கு வயிற்று நோய் ஏற்பட்டது எனக் கருதிய அவரது சீடர்கள் சுந்தன் மீது கடும் கோபம் கொண்டனர். இதனை அறிந்த புத்தர், சுந்தன் அளித்த இறுதி உணவாலேயே தான் மகாபரிநிர்வானம் அடையப் போகவதாக கூறி, தனக்கு இறுதி உணவு வழங்கிய சுந்தனுக்கு தனது சார்பாக நன்றி கூறி, சுந்தனை சமாதானப்படுத்துமாறு ஆனந்தரை அழைத்து கூறினார். [2]
தேரவாத பௌத்த நூல்களில் சுந்தன் வழங்கிய கெட்டுப் போன பன்றி இறைச்சியை புத்தர் உண்டதால்தான், வயிற்று நோயால் புத்தர் பரிநிர்வானம் அடைந்தார் எனக் கூறுகிறது. [3]
புத்தர் மகாபரிநிர்வானம் அடையக் காரணமான சுந்தன் பௌத்த சமயத்தில் தனி இடம் பெற்றார். பல பௌத்த நாடுகளில் விகாரைகளில் சுந்தனின் சிற்பங்கள் உள்ளது. தாய்லாந்து நாட்டின் ஆயுத்தாய நகர விகாரையில் சுந்தன் பன்றி இறைச்சி சமைக்கும் ஓவியம் உள்ளது.