சுந்தர காண்டம் | |
---|---|
சுந்தர காண்டம் | |
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | பூர்ணிமா பாக்யராஜ் |
கதை | கே. பாக்யராஜ் |
இசை | தீபக் |
நடிப்பு | கே. பாக்யராஜ் பானுப்ரியா சிந்துஜா கணேஷ்கர் ஜூனியர் பாலையா |
ஒளிப்பதிவு | ரவீந்திர குமார் திவாரி |
படத்தொகுப்பு | எஸ்.எம்.வி.சுப்பு |
வெளியீடு | 15 நவம்பர் 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுந்தர காண்டம் (Sundara Kandam) திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ் , பானுப்ரியா, சிந்துஜா, கணேஷ்கர், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வரும் ஐந்தாவது காண்டத்தின் பெயரைத் தழுவியே இப்படத்தின் பெயர் வைக்கப்பட்டது. பின்னர், இந்த படம் இந்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அந்தாஜ் என்ற பெயருடன் வெளிவந்தது.
சண்முகமணி (பாக்யராஜ்) தான் படித்த பள்ளிக்கே தமிழ் மொழி பாடம் எடுக்க ஆசிரியராக வருகிறார். பள்ளியின் முதல் நாளே, ப்ரியா என்ற மாணவியால் கேலிசெய்ய படுகிறார் சண்முகமணி. பிரியா என்னசெய்தாலும் அதில் தப்பு கண்டுபிடித்தார் சண்முகமணி. ஆனாலும் ப்ரியாவின் சுட்டித்தனம் குறையவில்லை. ப்ரியாவின் நண்பர்கள் ப்ரியா எழுதியதாக ஒரு போலி காதல் கடிதத்தை சண்முகமணியின் மேஜையில் வைத்துவிடுகிறார்கள். அதனை பார்த்து அதுவும் ப்ரியாவின் சுட்டித்தனம் என்று எண்ணி, ப்ரியாவை திட்டி அந்த காதல் கடித்தை அவளிடம் தந்துவிடுகிறார் சண்முகமணி. மாறாக ப்ரியாவோ சண்முகமணி வசம் காதல் கொள்கிறாள். ப்ரியாவின் நண்பர்கள் மேலும் பல விளையாட்டுகள் செய்ய, தலைமை ஆசிரியரிடம் சண்முகமணி புகார் செய்ய, வாதிட வாப்பில்லாமல் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறாள் ப்ரியா.
இதில் பிரியாவின் தவறு எதுவும் இல்லை என்று பின்னர் தெரியவர சண்முகமணி மன்னிப்பு கேட்கிறார். இருவரை பற்றியும் தவறாக மற்றவர்கள் நினைப்பதால் திருமணம் செய்து கொள்வது வழி என்று தோன்றுகிறது. ஆனால் மாணவியை மணப்பது மரபு இல்லை என்பதால் சண்முகமணி மறுத்துவிடுகிறார். அதனால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய ப்ரியா, சண்முகமணியை மணக்க வேண்டுகிறாள். மேலும் பல வழிகளில் காதல் தொந்தரவு ப்ரியா செய்ததால், தெய்வானை என்ற ஒரு பெண்ணை மணக்கிறார் சண்முகமணி.
ஆனால் சண்முகமணி நீண்ட நாள் கனவுகண்டு எதிர்பார்த்த எந்த குணமும் தெய்வானையிடம் இல்லை. இருப்பினும் அவைகளை பெற மிகவும் முயன்றாள் தெய்வானை. இந்த சூழ்நிலையை உணர்ந்த ப்ரியா, தெய்வானைக்கு சமைக்க, ஆங்கிலம் பேச உதவி செய்கிறாள். தெய்வானை ப்ரியா நட்பு சண்முகமணிக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சண்முகமணி எவ்வாறு எதிர்கொண்டார் என்பதே மீதி கதை.
இந்த படத்தை எழுதி இயக்கியவர் கே. பாக்யராஜ் ஆவார். அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா சினி கம்பைன்ஸ்[2] மூலம் இப்படத்தை தயாரித்தார்.
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தீபக் ஆவார். காளிதாசன், புலமைப்பித்தன் மற்றும் வைரமுத்து இப்படத்தின் பாடல்களை எழுதினர்.
வரிசை
எண் |
பாடல் |
---|---|
1 | உருகுதே நெஞ்சம் உன்னை |
2 | இது பள்ளிக்கூட வயசு |
3 | குக்கு குயிலோன்னு |
4 | பூங்குருவி பாடடி |
5 | வா வா பாட்டு பாடலாம் |