சுந்தரம் வர்மா (Sundaram Verma) ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் . இந்தியாவின் வறண்ட பகுதிகளில் மரம் வளர்ப்பதற்கு உதவும் 'உலர் நில வேளாண்மை' நுட்பத்தை உருவாக்கியதற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. [1][2][3][4]
வர்மா ராஜஸ்தானின்சிகார் நகரில் உள்ள தண்டா கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். 1972 இல் பட்டப்படிப்பை முடித்த பின்னர், விவசாயத்தை ஒரு தொழிலாக தொடர முடிவு செய்தார். [5] புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிருஷி விக்யான் கேந்திரா (கே.வி.கே) [6] மூலம் உலர் நில விவசாயத்தைப் படித்தார். [6] பத்தாண்டுகளுக்குப் பிறகு, வறண்ட பகுதிகளுக்கு விவசாய நுட்பத்தை உருவாக்கி, அதில் அனைத்து வகையான மரங்களையும் ஒரு லிட்டர் தண்ணீரில் நடலாம் என்பதை விளக்கினார். இன்றுவரை இவர் 50,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். [7]