சுந்தரவன மாவட்டம் | |
---|---|
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:குத்தி அரண்மனை, கானிங் நிலம், மால்டா பாலம், சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம், மால்டா ஆறு மற்றும் கானிங் விளையாட்டு வளாகம் | |
நாடி | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டம் | இராஜதானி |
நிறுவிய ஆண்டு | 2022 |
அரசு | |
• மக்களவை தொகுதிகள் | ஜெய்நகர் மக்களவைத் தொகுதி (அட்டவணை சமூகம்), மதுராப்பூர் மக்களவைத் தொகுதி (அட்டவணை சமூகம்) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கில மொழி |
Demographics | |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
சுந்தரவன மாவட்டம் (Sundarbans), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 24வது மாவட்டமாக இம்ம்மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜதானி கோட்டத்தில் உள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் வடக்கு 24 பர்கனா மாவட்டங்களின் தெற்குகில் உள்ள சுந்தரவனக்காடுகளின் பகுதிகளைக் கொண்டு சுந்தரவன மாவட்டம் நிறுவப்படுவதாக 28 நவம்பர் 2022 அன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.[1][2] வங்காள விரிகுடாவை ஒட்டிய இம்மாவட்டத்தின் கடற்கரைகள் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பெற்றது. இம்மாவட்டத்தில் வங்காளப் புலிகள் அதிகம் உள்ளது.
இம்மாவட்டத்தின் சுந்தரவனக்காடுகள்[3] மற்றும் சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான உள்ளது.
சுந்தரவன மாவட்டத்தின் 102 வடிநிலத் தீவுகளில் 54 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர். மீதம் உள்ள தீவுகள் காப்புக் காடுகளாக உள்ளது. 25,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுந்தரவன மாவட்டத்தில் ஏறத்தாழ 3.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். டிசம்பர், 2011 கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தில் 271 வங்காளப் புலிகள் வாழ்கிறது. இம்மாவட்டத்தின் கடற்கரைகள் புயல்களால் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்படுகிறது.[4]