சுந்தர் தாசு குங்கர் Sunder Das Khungar | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | ஆட்சிப் பணீயாளர் கட்டிடப் பொறியாளர் |
அறியப்படுவது | பக்ரா அணை குங்கர் ஆணையம் |
விருதுகள் | பத்ம பூசண் |
சுந்தர் தாசு குங்கர் (Sunder Das Khungar) இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் ஒரு கட்டிடப் பொறியாளர் ஆவார். பக்ரா அணை திட்டத்தின் பொது மேலாளராக குங்கர் பணி புரிந்தார்.[1] நீர்ப்பாசனத்திற்காக கட்டப்பட்ட அணையை, ஐந்து நீர் மின் உற்பத்தி அலகுகளை இணைப்பதன் மூலம் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இவரது முன்மொழிவாகும்.[2] தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் நீர் மேலாண்மை நடவடிக்கைகளை ஆராய்வதற்காக 1960 ஆம் ஆண்டு நீர்ப்பாசன மற்றும் மின் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.[3] சுந்தர் தாசு குங்கரின் பங்களிப்புகளுக்காக 1955 ஆம் ஆண்டு இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[4]