சுனிதி சௌத்ரி Suniti Choudhury | |
---|---|
பிறப்பு | 22 மே 1917 பிரித்தானிய இந்தியா, கொமில்லா |
இறப்பு | 12 சனவரி 1988 (70 வயதில்) |
அறியப்படுவது | தன் 14ஆம் வயதில் பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொன்றதற்காக |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சுனிதி சௌத்ரி (22 மே 1917 - 12 சனவரி 1988) என்பவர் ஒரு இந்திய தேசியவாதி ஆவார். இவர் தன் 14ஆம் வயதில் சாந்தி கோஷ் என்பவருடன் சேர்ந்து, ஒரு பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொன்றார்.[1][2][3] மேலும் இவரது ஆயுதப் புரட்சிப் போராட்டத்துக்காக சிறப்பாக அறியப்படுகிறார்.[2][4][5][6]
சுனிதி சௌத்ரி 22 மே 1917 அன்று வங்காளத்தின் (தற்போதைய வங்காளதேசம் ) கொமில்லா மாவட்டத்தின் , கொமில்லாவில் உமாசரண் சௌத்ரி மற்றும் சுரசுந்தரி சௌத்ரி ஆகியோருக்குப் பிறந்தார்.[7] இவர் கொமில்லாவில் உள்ள போய்சுனிசா பாலிகா வித்யாலயா பள்ளி மாணவியாவார்.[8][9]
கொமிலாவில் வசித்தவந்த உல்லாஸ்கர் தத்தாவின் புரட்சிகர நடவடிக்கைகளில் சௌதிரி கவரப்பட்டார். புரட்சிகர விடுதலை இயக்கமான யுகந்தர் இயக்கத்தின் பிரபுல்லாலினி பிரம்மாவின் மாணவியாக ஆனார்.[10] மேலும் இவர் திரிபுரா ஜில்லா சத்ரி சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 6 மே 1931 இல் நடந்த திரிபுரா ஜில்லா சத்ரி சங்க ஆண்டு மாநாட்டில் மகளிர் தன்னார்வலர் அணியின் தலைவியாக சௌத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இந்த நேரத்தில், இவர் ' மீரா தேவி ' என்ற புனைபெயரில் அறியப்பட்டார்.[7][11]
14 திசம்பர் 1931 இல், 14 வயதான சௌதிரியும், 15 வயதான சாந்தி கோஷ் ஆகிய இருவரும் வங்காளத்தின் கொமில்லா மாவட்ட நீதிபதியான சார்லஸ் ஸ்டீவன்சின் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு இடையில் ஒரு நீச்சல் போட்டியை ஏற்பாடு செய்யக் கோரி ஒரு விண்ணப்பத்தை அவரிடம் அளித்தனர்.[2] இந்த விண்ணப்பத்தை ஸ்டீவன்ஸ் கவனித்துக் கொண்டிருந்தபோது, கோசும் சௌத்ரியும் தங்கள் சால்வ்களில் கீழ் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரை சுட்டுக் கொன்றனர்.[2][12][13]
இதனையடுத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.[2] 1932 பெப்ரவரி மாதம், கோஷ் மற்றும் சௌத்ரி ஆகியோர் கல்கத்தா நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். இவர்கள் சிறுமிகளாக இருந்ததால், இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[14] ஒரு நேர்காணலில், "ஒரு குதிரைக் கொட்டடியில் வாழ்வதை விட இறப்பது நல்லது." எனக் குறிப்பிட்டனர்.[5][14]
இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த முகாமில் "மூன்றாம் வகுப்பு கைதி"யாக வைக்கப்பட்டிருந்தார்.[15] இவர் புரிந்த செயலின் விளைவாக இவரது தந்தையின் அரசாங்க ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது, இவரது இரண்டு அண்ணன்கள் எவ்வித விசாரணையுமின்றி காவலில் வைக்கப்படனர். இவரது தம்பி ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தார்.[8]
ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் ஆங்கிலேய அரசுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் 1931இல் விடுதலை செய்யப்பட்டனர்.[8]
சௌத்ரி தன் விடுதலைக்குப் பிறகு மருத்துக் கல்வி (எம்.பி.பி.எஸ்) பயின்று மருத்துவரானார்,. 1947 ஆம் ஆண்டில், தொழிற்சங்க தலைவரான பிரதியானட் குமார் கோஷ் என்பவரை மணந்தார்.[8]
1988 சனவரி 12 அன்றுசௌத்ரி இறந்தார்.[8]
{{cite book}}
: Empty citation (help)