சுபாங் (P104) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Subang (104) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | சுபாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுபாங் ஜெயா; சுபாங், சிலாங்கூர் கோத்தா டாமன்சாரா, கிளானா ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கான், சா ஆலாம், சுங்கை பூலோ |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
நீக்கப்பட்ட காலம் | சா ஆலாம் தொகுதி |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | வோங் சென் (Wong Chen) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 235,752 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 69 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சுபாங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Subang; ஆங்கிலம்: Subang Federal Constituency; சீனம்: 梳邦国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P104) ஆகும்.
சுபாங் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1995-ஆம் ஆண்டில் இருந்து சுபாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சுபாங் நகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் இந்த நகரம், சா ஆலாம், சுபாங் ஜெயா பெருநகரங்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.[5]
சுபாங் ஜெயா, கிளானா ஜெயா, சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang International Airport) இங்குதான் உள்ளது.
இந்த மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள்.
பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சுபாங் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சா ஆலாம்; பெட்டாலிங் ஜெயா தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P097 | 1995–1999 | மகாலிங்கம் முத்துக்கிருஷ்ணன் (M. Mahalingam) |
பாரிசான் (மலேசிய இந்திய காங்கிரசு) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | கர்னைல் சிங் நிஜார் (Karnail Singh Nijhar) | ||
11-ஆவது மக்களவை | P107 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | சிவராசா ராசையா (Sivarasa Rasiah) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | P104 | 2018–2022¹ | வோங் சென் (Wong Chen) |
பாக்காத்தான் அராப்பான் (பி.கே.ஆர்) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது |
குறிப்பு: 1 2018-இல் சுபாங் மக்களவைத் தொகுதி; முன்னாள் கெலனா ஜெயா தொகுதியிலிருந்து தெற்கே சுபாங் ஜெயா நகர மையத்திற்கு மாற்றப்பட்டது
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
230,490 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
179,578 | 77.07% | ▼ 9.59 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
177,983 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
657 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
938 | - | - |
பெரும்பான்மை (Majority) |
115,074 | 64.65% | ▼ 8.82 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
வோங் சென் (Wong Chen) |
பாக்காத்தான் (PH) | 138,259 | 77.68% | -5.40 ▼ | |
ஆங் கியாங் நி (Ang Hiang Ni) |
பெரிக்காத்தான் (PN) | 21,185 | 13.03% | +13.03 | |
கோவ் சியோங் வை (Kow Siong Wai) |
பாரிசான் (BN) | 16,539 | 9.29% | -0.32 ▼ |