சுப்பராய சாத்திரி (Subbaraya Sastri) கருநாடக இசை வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின்[1] மகனும் மாணவருமாவார். கரருநாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அறியப்படும், இசைக்கலைஞர்கள் தியாகராஜர் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரிடமிருந்தும் இசையைப் படித்தார்.
சுப்பராயர் 1803இல் சியாம சாஸ்திரியின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இவரை தியாகராஜரிடம் அனுப்பினார். முத்துசாமி தீட்சிதரிடம் இருந்து சில கிருதிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தஞ்சாவூர் அரண்மனையின் இசைக்கலைஞரான மேரு கோஸ்வாமி மற்றும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் வசித்து வந்த ராமதாஸ் சுவாமி ஆகியோரிடமும் இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டார்.
சுப்பராய சாத்திரி ஒரு சில கிருதிகளை மட்டுமே இயற்றினார். சாத்திரி தனது பெரும்பாலான கிருதிகளை அன்னை தேவியைப் புகழ்ந்து இயற்றினார். ஜனனி நின்னுவினா (ரீதுகௌலா) நின்னு சேவிஞ்சினா (யதுகுலகாம்போதி)[2] ,வெங்கடாசல விஹார (அமீர்கல்யாணி) மற்றும் சங்கரி நீ (பெகடா) இவரது கிருதிகளில் சில.