தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 30 ஆகத்து 1980 சென்னை, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 262) | 6 பெப்ரவரி 2010 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 14 பெப்ரவரி 2010 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 176) | 20 ஆகஸ்ட் 2008 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 13 ஜூன் 2011 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப (தொப்பி 35) | 4 ஜூன் 2011 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2000– | தமிழ்நாடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003– | தெற்கு வலயம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008- | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 9 பெப்ரவரி 2011 |
சுப்பிரமணியம் பத்ரிநாத் (பிறப்பு. ஆகஸ்ட் 30, 1980) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலக்கை, நடுவரிசை மட்டையாளர்.இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் விதர்பா ஆகிய அணிகளின் தலைவராகவும் இந்தியன் பிரீமியர் லீக தொடர்களில் இவர் 2013 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடினார்.[1] மேலும் இவர் பல முறைகள் இந்திய லெவன் அணிகளில் விளையாடியுள்ளார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான 30 பேர்கொண்ட பட்டியலில் இவர் இடம்பெற்றார்.ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ய்ப்பு வழங்கப்படவில்லை.
பத்ரிநாத் சென்னையில் பிறந்தார். கே.கே.நகர் பத்மா சேசாத்திரி பாலபவன் பள்ளியில் படித்தார்.[2] முதல்தர போட்டிகளில் ஏராளமான ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் பிரபலமடையவில்லை. இவர் இந்திய அணிக்காக ஏழு ஒரு-நாள் போட்டிகளில் விளையாடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 பெப்ரவரி 6 இல் பங்கேற்ற முதல் தேர்வுப் போட்டியில் அரைசதம் அடித்தார்.[3]
2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அப்போது இவர் மிஸ்டர் டிபெண்டபிள் என்று குறிப்பிடப்பட்டார். இந்தப் பருவத்தில் சிறப்பாகச் எயல்பட்டதாலும், இதன் பின் வந்த உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்தாலும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு விளையாடும் வழங்கப்பட்டது. பின் வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் ஓய்வு பெற்றதை அடுத்து நியூசிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[3][4] 2014 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் இவரை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. பின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவாரி ஏலத்தில் எடுத்தது. பின் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் விதர்பா அணி சார்பாக விளையாடினார்.
சுப்ரமணியம் பத்ரிநாத்தின் செயல்பாடு (இந்தியன் பிரீமியர் லீ) | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | அணி | ஆட்டப்பகுதி | ஓட்டங்கள் | அதிகம் | சராசரி | ஸ்டிரைக் | 100 | 50 | 4s | 6s |
2008 | சென்னை சூப்பர் கிங்ஸ் [5][6][7][8][9] | 11 | 192 | 64 | 32.00 | 147.69 | 0 | 2 | 21 | 8 |
2009 | 11 | 177 | 59* | 19.66 | 107.92 | 0 | 1 | 20 | 4 | |
2010 | 15 | 356 | 55* | 32.36 | 117.49 | 0 | 2 | 41 | 5 | |
2011 | 13 | 396 | 71* | 56.57 | 126.51 | 0 | 5 | 38 | 9 | |
2012 | 9 | 196 | 57 | 28.00 | 108.28 | 0 | 1 | 23 | 2 | |
2008–2012 Total [10] | 59 | 1317 | 71* | 32.92 | 120.71 | 0 | 11 | 143 | 28 |
2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பெப்ரவரி 16 இல் , நாக்பூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்ட்டியின் முட்க்ஹல் ஆட்டப்பகுதியில் 139 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்து டேல் ஸ்டெயினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 நான்குகளும் அடங்கும். மேலும் ஏ பிடிவில்லியர்ஸ் அடித்த பந்தை கேட்ச் செய்து அவரை வீழ்த்த உதவினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 31 பந்துகளில் 6ஓட்டங்கள் எடுத்து பர்னாலின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]