சுப்ரத்தோ முகர்ஜி

சுப்ரத்தோ முகர்ஜி
ஏர் மார்சல் சுப்ரத்தோ முகர்ஜி
(குழுத் தலைவனின் அடையாளத்தை அணிந்த படம் அண். 1947)
பிறப்பு1911 மார்ச் 5
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1960 நவம்பர் 8 வயது 49)
தோக்கியோ, யப்பான்
சார்பு இந்தியா (1932–1947)
 இந்தியா (1947-1960)
சேவை/கிளைபிரிட்டிசு இந்தியா (1932–1947)
இந்தியா (1947–1960)
சேவைக்காலம்1932–1960
தரம் ஏர் மார்சல்
கட்டளைகோகாட், விமானப்படை தளம்
போர்கள்/யுத்தங்கள்போலோ நடவடிக்கை
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
இரண்டாம் உலகப் போர்
வாசிரித்தான் நடவடிக்கை (1936–1939)]]
விருதுகள் பிரிட்டிசு பேரரசின் ஆணை
உறவினர்நிர்பன் சந்திர முகர்ஜியின் குடும்பம் மற்றும் தாசு குடும்பம்

ஏர் மார்சல் சுப்ரதோ முகர்ஜி (Subroto Mukerjee) (1911 மார்ச் 5 - 1960 நவம்பர் 8) இவர் இந்திய விமானப்படையின் முதல் இந்தியத் தளபதியாவார். இவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நீடித்தது. மேலும் 1960இல் இவரது அகால மரணம் வரை பல கௌரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் "இந்திய விமானப்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

புகழ்பெற்ற வங்காளக் குடும்பத்தில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் கல்வி கற்றார். இவர் பேரரசின் விமானப்படையில் சேர்ந்தார். பின்னர் 1933இல் இந்திய விமானப்படையின் சேர்ந்த முதல் நபர்களில் இவரும் ஒருவர். இவர் 1933 முதல் 1941 வரை இந்திய விமானப் படையுடன் பறந்தார். இந்த நடவடிக்கையின் போது வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் விரிவான நடவடிக்கை நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டு அதில் பங்கு கொண்டார். இவர் 1942 இல் பாக்கித்தானின் குவெட்டாவிலிருக்கும் பணியாளர் கல்லூரியில் பயின்றார். 1942இல் விமானப் படைக்குத் திரும்பினார். இவர் 1943 முதல் 1944 வரை பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணமான கோகாத்தில் அமைந்துள்ள விமானத் தளத்தில் பணியாற்றினார். இவருக்கு 1945 இல் பிரிட்டுசு பேரரசின் ஒழுங்கு விருது வழங்கப்பட்டது.

இந்தியா பிரிந்ததைத் தொடர்ந்து, பேரரசின் இந்திய விமானப்படையின் துணை விமான தளபதியாக நியமிக்கப்பட்டார். பேரரசின் பாதுகாப்புக் கல்லூரியில் உயர் படிப்பை முடித்த பின்னர், 1954 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய விமானப் படையை போர் விமானமாக மாற்றுவதை இவர் மேற்பார்வையிட்டார். 1955 முதல், இவர் தலைமைப் பணியாளர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். 1960இல், இவர் டோக்கியோவில் இறந்தார். இவரது தற்செயலான மரணம் விமானப்படைக்கும் தேசத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், புது தில்லியில் இவரது உடல் முழு இராணுவ மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.

இவர் பல வரவுகளை வைத்திருந்தார்: 1938 இல் ஒரு விமானத்தை ஓட்டிய முதல் இந்தியர்; 1939 இல் ஒரு படைக்கு தலைமை தாங்கிய முதல் இந்தியர்; 1943 இல் ஒரு விமானத் தளத்திற்கு தலைமை தாங்கிய முதல் நபர் போன்றவை.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

முகர்ஜி கொல்கத்தாவில் 1911 மார்ச் 5, அன்று நன்கு அறியப்பட்ட வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சதீஷ் சந்திர முகர்ஜி, இந்திய ஆட்சிப் பணியில் ஆரம்பகால இந்திய அதிகாரியாவார். இவரது தாயார் சாருலதா முகர்ஜி, ஒரு சமூக சேவகராவார். இவரது தந்தைவழி தாத்தா, நிபரன் சந்திர முகர்ஜி, ஒரு பிரம்மாக, நாட்டில் சமூக மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் முன்னோடியாகவும், பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவரது தாய்வழி தாத்தா, பிரசன்னா குமார் ராய் , கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியின் இந்திய கல்விச் சேவையில் முதல் இந்திய முதல்வராக இருந்தார். இவரது தாய்வழி பாட்டி சரளா ராய், கல்வியாளரும் சமூக சேவையாளருமான கோகலே நினைவு பெண்கள் பள்ளியின் நிறுவனர் ஆவார். [1]

இவரது பெற்றோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவரான முகர்ஜி மூன்று மாத குழந்தையிலேயே இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், இவர் தனது குழந்தைப் பருவத்தை கிருட்டிணாநகர் மற்றும் வங்காளத்தின் கூக்ளி- சூச்சுராவில் கழித்தார். தனது ஆரம்ப நாட்களிலிருந்தே, இவர் ஒரு இராணுவ வாழ்க்கைக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அநேகமாக இவரது மாமா, விமானப் படை அதிகாரி லெப்டினன்ட் இந்திர லால் ராய், முதல் உலகப் போரின்போது பேரரசின் பறக்கும் படையில் சேர்ந்தார். புகழ்பெற்ற பறக்கும் செயல்வீரர் மற்றும் பறக்கும் வல்லுனர் பட்டம் வழங்கப்பட்ட முதல் இந்தியர் ராய் மட்டுமே. [1]

முகர்ஜியின் மூத்த சகோதரி ரேணுகா ரே ஒரு முக்கிய சுதந்திர போராட்ட வீரராவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மற்றும் இந்தியத் தூதராகவும் இருந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளியல் பள்ளி பயின்றவர் . [2]

முகர்ஜி நைனித்தால் மறைமாவட்ட சிறுவர் உயர்நிலைப்பள்ளியிலும் (இன்று செர்வுட் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது ) மற்றும் கொல்கத்தாவில் உள்ள லோரெட்டோ ஆங்கிலப் பள்ளியிலும், இங்கிலாந்தில் ஆம்ப்சுடெட்டில் உள்ள ஒரு பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் இவர் பீர்பம் மாவட்டப் பள்ளியில் சேர்ந்தார். மேலும் 1927இல் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் ஹவுரா மாவட்டப் பள்ளியின் மாணவராகவும் இருந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முன்பு கொல்கத்தாவின் மாநிலப் பலகலைக்கழகக் கல்லூரியில் ஒரு வருடம் பயின்றார். [1]

இராணுவ வாழ்க்கை

[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கையில்

[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1939 ஆம் ஆண்டில், முகர்ஜி முக்கிய மகாராஷ்டிர குடும்பத்தைச் சேர்ந்த சாரதா முகர்ஜி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். சாரதா சமூகப் பணிகளில் தீவிரமாக இருந்தார். கணவர் இறந்த பிறகு, அவர் பொது விவகாரங்களில் தீவிரமாக இருந்தார். 1977ஆம் ஆண்டில், அவர் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [3] பின்னர் அவர் குஜராத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அவர் இரு மாநிலங்களின் முதல் பெண் ஆளுநராக இருந்தார். [4]

இறப்பு

[தொகு]

1960 நவம்பரில் ஏர் இந்தியா தனது சேவையை யப்பானின் தோக்கியோவுக்கு ஆரம்பித்தது. முகர்ஜி மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரதாப் சந்திர லால் ஆகியோர் இந்த விமானத்தில் பயணித்தனர். தோக்கியோவில் தரையிறங்கிய பின்னர், 1960 நவம்பர் 8 அன்று, முகர்ஜி இந்திய கடற்படை நண்பருடன் ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தார். ஒருஉணவுத்துண்டு இவரது மூச்சுக்குழாயில் அடைக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார். அடுத்த நாள், வரப்பட்டது . [5] பின்னர் முகர்ஜி முழு இராணுவ மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார். [6] [7] இந்த மரணம் தேசத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவம்பர் 9 அன்று இந்திய அரசிதழில் கருப்பு பக்கங்கள் கொண்ட அசாதாரண பதிப்பு வெளியிடப்பட்டது. [8] புது தில்லியில் உள்ள தூதர்கள் மற்றும் இராணுவ இணைப்பாளர்களால் இந்திய அரசு உலகெங்கிலும் இருந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. [9]

மரபு

[தொகு]

ஏ.சி.எம்.பிரதாப் சந்திர லால், முகர்ஜியை இந்தியாவில் இராணுவ விமானப் பயணத்தின் முன்னோடி என்று கருதினார். முக்ர்ஜி விமானப்படையில் மிகவும் விரும்பப்பட்ட நபராக இருந்தார். [6] முகர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான ஆஸ்பி இன்ஜினியர் 1960 திசம்பர் 1 முதல் விமானப் படையின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சிறப்பு உத்தரவை அவர் வெளியிட்டார், மேலும் அவரை "இந்திய விமானப்படையின் தந்தை" என்று அழைத்தார். [10]

ஒரு சிறந்த கால்பந்து ஆர்வலரும், மோகன் பகான் தடகளச் சங்கத்தின் வழக்கமான உறுப்பினருமான முகர்ஜி, ஒரு இடைநிலைப் பள்ளி அகில இந்திய கால்பந்து போட்டியின் யோசனையை முன்வைத்திருந்தார். இது இவரது மரணத்திற்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது. சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டி இன்னும் இந்திய பள்ளிகளில் இருந்து திறமையான வீரர்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The Saga of a Soaring Legend". indianairforce.nic.in. Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2006-08-10.
  2. "Life Lived in an Age of Extremes". www.telegraphindia.com (in ஆங்கிலம்).
  3. Parker, Cecil (7 October 2012). "Gubernatorial grace". The Hindu (in Indian English).
  4. "List of Governors". ap.gov.in. Archived from the original on 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  5. Lal 1986, ப. 85.
  6. 6.0 6.1 Lal 1986.
  7. "Late Air Marshal S Mukerjee" (PDF). pibarchive.nic.in. 10 November 1960.
  8. "The Gazettte of India Extraordinary" (PDF). pibarchive.nic.in. 9 November 1960.
  9. "Late Air Marshal Mukerjee" (PDF). pibarchsive.nic.in. 11 November 1960.
  10. "Air Marshal Engineer's order of the day" (PDF). pibarchive.nic.in. 1 December 1960.
  11. "Durand Schools Tournament Opens Tomorrow – Army Chief to Inaugurate" (PDF). pibarchive.nic.in. 14 November 1960.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]