சுமங்கல சர்மா (Sumangala Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். வில்வித்தை விளையாட்டில் இவர் போட்டியிடுகிறார்.[1]
சர்மா 2004 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] பெண்கள் தனிநபர் தரவரிசை சுற்றில் 72 அம்புகள் சுற்றில் 638 புள்ளிகள் எடுத்து 20 ஆவது இடத்தைப் பிடித்தார். முதல் சுற்றில் சீன தைபேயின் தரவரிசை 45 ஆவது இடத்திலிருந்த சென் லி சூவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 18 அம்புப் போட்டியில் 142-133 என்ற புள்ளிகள் கணக்கில் சர்மா சென் லியைத் தோற்கடித்து 32 பேர் சுற்றுக்கு முன்னேறினார். 32 பேர் சுற்றில் இவர் தென்னாப்பிரிக்காவின் கிர்சுட்டின் இழீன் லூயிசை எதிர்கொண்டார். 18 அம்புகள் போட்டியில் 52 ஆவது இடத்தில் இருந்த வில்லாளரிடம் 157-153 என்ற புள்ளிகள் கணக்கில் சர்மா தோற்றார். பெண்கள் தனிநபர் வில்வித்தை போட்டியில் சுமங்கல சர்மா 24 வது இடத்தைப் பிடித்தார்.
8 வது இடத்தைப் பிடித்த இந்திய பெண்கள் வில்வித்தை அணியின் உறுப்பினராகவும் சுமங்கல சர்மா இருந்தார்.