சுமனா கிட்டூர் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | காவேரி |
பிறப்பு | சுமனா கிட்டூர் கிட்டூர், பெரியபட்டினம், மைசூர், கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இதழியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–முதல் |
அமைப்பு(கள்) | மெகா மூவிஸ் |
அறியப்படுவது | திரைப்படம், இயக்குநர், வசனம், எழுத்தாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சிலம் பாலா, கல்லார சாந்தே, எடகரிகே, கிரகோரினா கயலிகளு |
வாழ்க்கைத் துணை | சிறீனிவாசு (தி. 2020) |
சுமன் கித்தூர் (Sumana Kittur) என்பவர் இந்தியப் பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் கன்னட திரைப்படத்துறை பாடலாசிரியர் ஆவார்.[1] இவர் ஸ்லம் பாலா (2008) என்ற படத்தின் மூலம் இயக்குநராகத் திரைப்படத் துறையில் தனது பணியினைத் தொடங்கினார். இவர் இதற்கு முன்பு கல்லர சந்தே (2009), எடேகரிகே (2012) மற்றும் கிரகோரினா கய்யாலிகள் (2016) போன்ற படங்களில் பணியாற்றினார். இவரது பெரும்பாலான படங்கள் சமூக விரோதிகள் குறித்து எடுக்கப்பட்டன.[2] மாநில விருது பெற்ற சில பெண் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
சுமன் கருநாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் பெரியபட்னத்திற்கு அருகில் உள்ள கித்தூரில் பிறந்தார். இவருடைய தந்தை இதே கிராமத்தில் ஒரு சிறிய திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்தார்.[3] திரையரங்கம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தாலும், திரைப்படம் மீதான காதலாலும், ஆர்வத்தாலும் திரையரங்கினை தொடர்ந்து நடத்தினார். சிறு நகரங்களுக்குக் கூட பொழுதுபோக்கைத் திரைப்படத்தினைக் கொண்டு வர வேண்டும் என்ற இவரது பார்வையே இவர் திரைப்படங்களை எடுக்கக் காரணமாக இருந்தது. இவருடைய உத்வேகம் ஆரம்பத்தில் இவருடைய தந்தையிடமிருந்து வந்தது. பட்டம் பெற்ற பிறகு, கிராம மக்கள் இவரைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், இவர் பெங்களூருக்குச் சென்றார். இவரிடம் இருந்த திறமையைக் கண்டு, இவரது தந்தை இவரைப் பத்திரிக்கையாளரான திரைப்பட இயக்குநரான அக்னி ஸ்ரீதரிடம் அழைத்துச் சென்றார். இவர் உதவியாகத் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அக்னி இதழியலின் எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது எழுத்துத் திறமையால் பின்னர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினார். இவரின் திறமையை முன்னறிவித்த இவரது குரு திரைப்படங்களில் பணியாற்றும் முதல் வாய்ப்பை வழங்கினார். இவர் ஆ தினகலு படத்துடன் திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கினார். படத்தின் முழுப் பணிகளையும் இவர் செய்திருந்தாலும், இயக்குநருக்கு உரியப் பங்கினைக் கொடுத்தார், இவரது திறமையை உணர்ந்து அறிமுக இயக்குநராகும் பெரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
ஆண்டு | தலைப்பு | பணி | குறிப்புகள் | |
---|---|---|---|---|
2007 | ஆ தினகலு | இணை இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் | ||
2008 | சேரி பாலா | இயக்குநர், பாடலாசிரியர் | [4] | |
2009 | கல்லார சாந்தே | இயக்குநர், பாடலாசிரியர் | கர்நாடக மாநில திரைப்பட விருது (சிறப்பு நடுவர் விருது) | [4] |
2012 | எடேகரிகே | இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் | மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான கர்நாடக மாநில திரைப்பட விருது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது சிறந்த இயக்குநருக்கான பெங்களூர் டைம்ஸ் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
[5] [6] [7] |
2016 | கிரகோரினா கய்யாலிகள் | இயக்குநர் | [8] [9] [10] |
சுமனா கித்தூருக்கு 17 ஏப்ரல் 2020 அன்று திருமணம் நடைபெற்றது.[11]